இரத்தவியல் தொடர்பாக மாநில அளவில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய ஒரு நாள் கருத்தரங்கு

Madurai Minutes
0

தமிழ்நாட்டின் மிகப்பிரபலமான மருத்துவமனைகளுள் ஒன்றான மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC), இரத்த நோய்களை கையாளும் ஒரு சிறப்பு பிரிவான இரத்தவியல் துறை ‘இரத்தவியல் அப்டேட் 2024’ என்ற பெயரில்  மாநில அளவில் நடைபெறும் ஒரு கருத்தரங்கை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது. 


மருத்துவப் பணியாற்றும் மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் இரத்தவியல் துறையில் பட்டமேற்படிப்பு பயிலும் மருத்துவ மாணவர்கள் ஆகியோர், இரத்தவியல் குறித்த நிகழ்நிலைப்படுத்தப்பட்ட தகவல்களை அறிந்துகொள்ளவும் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பகிர்ந்துகொள்ளவும் இக்கருத்தரங்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. 


இக்கருத்தரங்கு நிகழ்வை  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் டீன் டாக்டர் தர்மராஜ் துவக்கி வைத்தார். டாக்டர் நடராஜன், டாக்டர் ஜவஹர், இவர்களுடன் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி, மருத்துவ நிர்வாகி டாக்டர் கண்ணன் மற்றும் IMA செயலாளர் டாக்டர். ஆனந்த செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மாநிலம் முழுவதிலுமிருந்து 400-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மருத்துவ கல்வி பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் ஒரு அங்கமாக, முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்களுக்கான ஒரு வினாடி வினா நிகழ்ச்சியும் இடம்பெற்றது இந்நிகழ்வின் சுவாரஸ்யத்தை அதிகமாக்கியது. 


இந்தியா முழுவதிலுமிருந்து வந்திருந்த மருத்துவ வல்லுநர்கள் இக்கருத்தரங்கில் உரையாற்றினர். லுகேமியா, லிம்போமா மற்றும் மல்டிபிள் மயலோமா போன்ற இரத்தப்புற்றுநோய்கள் மற்றும் தலசீமியா, இரத்தச்சோகை மற்றும் முதன்மை நோயெதிர்ப்பாற்றல் பற்றாக்குறை போன்ற மரபியல் ரீதியாக வரக்கூடிய இரத்தக்கோளாறுகள் போன்ற பல்வேறு இரத்த சீர்கேடுகள் குறித்து இக்கருத்தரங்கில் சிறப்புரைகளும், பயனுள்ள விவாதங்களும் நடைபெற்றன.  


மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் இரத்த புற்றுநோயியல் துறையின் தலைவர் டாக்டர். காசி விஸ்வநாதன் இது குறித்து கூறியதாவது: "குறிப்பிட்ட சில இரத்தக்கோளாறுகள் மற்றும் இரத்தப்புற்றுநோய்களுக்கு குணமளிக்கும் சிகிச்சையாக எலும்பு மஜ்ஜை மாற்றுசிகிச்சை என்ற சிறப்பு சிகிச்சை இருக்கிறது. இதுவரை 400-க்கும் அதிகமான எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகளை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிகழ்த்தியிருப்பது  குறிப்பிடத்தக்கது.  இவைகளுள், தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் விரிவான உடல்நல காப்பீடு திட்டத்தின் கீழ் 50% எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகள் நடத்தப்பட்டு, ஏழை எளியவர்களுக்கு புதிய வாழ்க்கை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. " இவ்வாறு அவர் கூறினார். 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !