10-ம் வகுப்பில் 491 மதிப்பெண் எடுத்த மாணவிக்கு கக்கன் விருது வழங்கப்பட்டது !

Madurai Minutes
0

மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் முரளி. இவரது மகள் மொழிவதனா தெப்பக்குளம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் குடும்ப வறுமையை தாண்டி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 491 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். குடும்ப வறுமையான சூழலிலும் அதிக மதிப்பெண் எடுத்தது பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 


இந்நிலையில் மேலூர் பழையசுக்காம்பட்டி Blue star இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மாணவி மொழிவதனாவிற்கு கக்கன் விருது வழங்கப்பட்டது. இதனை நற்பணி மன்ற நிர்வாகிகள் வெங்கல பிரபு, அருண் சின்னதுரை மற்றும் சமூக ஆர்வலர் ராஜ முருகன் வழங்கினர்.


இது குறித்து மாணவி மொழிவதனா கூறுகையில்..., " தொடர்ந்து பலரும் எனக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதே போல் பனிரெண்டாம் வகுப்பிலும், கல்லூரியிலும் நல்ல மதிப்பெண் எடுத்து அரசுப் பணியில் சேர்ந்து பொது சேவையில் ஈடுபடுவேன் என தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !