மதுரை அப்போலோவில் 51வயது நபருக்கு மாற்று கல்லீரல் பொருத்தி சாதனை

Madurai Minutes
0


மூளைச்சாவு ஏற்பட்டவரின் கல்லீரலை பொருத்தி மதுரை அப்போலோ மருத்துவமனை சாதனை படைத்ததுள்ளது. இதுகுறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவ குழுவினர்கள் கூறியதாவது:

கடந்த நவ.16 அன்று தமிழ்நாடு உறுப்பு மாற்று வலையமைப்பு மூலம் மூளைச்சாவு ஏற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நபரிடமிருந்து கல்லீரல் பெறுவதற்கான வாய்ப்பு குறித்த தகவல் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு கிடைத்தது. தகவல் கிடைத்த உடனேயே அறுவை சிகிச்சை குழுவானது இரண்டு அணிகளாகப் பிரிந்து வேகமாக செயலாற்றத் தொடங்கியது. ஒரு குழு அரசு மருத்துவமனையிலிருந்து கல்லீரலைப் பெற்று வருவதற்காக நவ.17ம் தேதி காலை 5 மணிக்கு அனுப்பப்பட்டது. அதேவேளையில் மற்றொரு குழுவினர் கல்லீரல் பொருத்த வேண்டியவருக்கான அறுவை சிகிச்சைக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டனர். மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து பெறப்பட்ட கல்லீரலின் ஏற்புத் தன்மை மற்றும் செயல்திறன் உறுதி செய்யப்பட்டு சரியாக 10 மணிக்கு பெறப்பட்டது. 


மேலும் மாற்று கல்லீரலை வேகமாகவும், பாதுகாப்பாகவும் கொண்டு வருவதற்கு போக்குவரத்து பசுமை வளையம் ஏற்படுத்தப்பட்டு 2.30 நிமிடங்களுக்குள் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. மாலை 3 மணிக்குள் நோயாளிக்கு மாற்று கல்லீரல் வெற்றிகரமாகப் பொருத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மாற்று உறுப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு அடுத்த 3 நாட்களுக்கு தொடர் கண்காணிப்பில் இருந்தார். மாற்று கல்லீரல் நன்றாக செயல்படுவது உறுதி செய்யப்பட்ட பின்பு, மெதுவாக அசைவு கொடுக்கத் தொடங்கினார். தற்போது புதிய கல்லீரலுடன் நோயாளி நல்ல நிலையில் உள்ளார். இந்த வாரத்திலேயே டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். 


டாக்டர்கள் சஞ்சய் கோவில், மதுசூதனன், கார்த்திகேயன், மஞ்சுநாத், ராஜேஷ் பிரபு, பிரவீண் குமார், அய்யப்பன், கணேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர். 


தலைமை செயல்பாட்டு அதிகாரி நீலக்கண்ணன், உதவி இயக்குனர் டாக்டர் பிரவீண் ராஜன், நிர்வாக பொது மேலாளர் நிகில் திவாரி, வர்த்தக பிரிவு பொது மேலாளர் மணிகண்டன் மற்றும் மாற்று உறுப்பு ஒருங்கிணைப்பாளர் பூமுருகன் ஆகியோர் இந்த அறுவைசிகிச்சை துரிதமாகவும் சிறப்பாகவும் நடைபெறுதில் முக்கிய பங்கு வகித்தனர்.


 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !