மதுரையில் உலக முதலீட்டாளர் மாநாடு 2024 பெருந்திரள் கூட்டம்

Madurai Minutes
0

தமிழ்நாடு அரசு ஜனவரி 2024 ல் 7 மற்றும் 8 ஆம் நாட்களில் உலக முதலீட்டாளர் மாநாடு 2024 சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஈர்த்து ஊக்குவிக்கும் நிகழ்வாக உலக முதலீட்டாளர் மாநாடு கருதப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் அமெரிக்கடாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரத்தை எட்டுவதை நோக்கிய தமிழ்நாடு அரசின் தளர்வறியாப் பயணத்தில் முக்கிய படிநிலை இந்த உலக முதலீட்டாளர் மாநாடு 2024 ஆகும்.


மதுரை மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட முதலீட்டு ஈர்ப்பு இலக்கு ரூ.1638.00 கோடி ஆகும். இதுவரை 190 நிறுவனங்கள் 5687 வேலைவாய்ப்புகளை உருவாக்க முதலீடு செய்திட முன் வந்துள்ளது, மேலும் முதலீடுகள் எதிர் நோக்கப்படுகின்றன.


உலக முதலீட்டாளர் மாநாடு 2024 மற்றும் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த தகவலைப் பரப்புரை செய்யும் நோக்குடன்  மடீட்சியா அரங்கில் மதுரை மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டம் நடைபெற்றது .


இவ்விழாவில் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன்  அவர்கள் விழாப் பேருரை நிகழ்த்தினார்.


அவர் பேசுகையில்,


மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய கனவு 2030 ஆம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் அமெரிக்கடாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரத்தை எட்டுவதை நோக்கியதாகும். இந்தியா போன்ற வளரும் நாட்டில் மனித வளம் கூடுதலாக இருக்கிறது நிதி கூடுதல் தேவை இருக்கிறது..


இந்த மாநாடு நடப்பது சென்னையில் நடந்தாலும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அதற்கான பங்களிப்பு தேவை.


எந்த ஊரு மாநிலம் வளர்ச்சி அடையும் என்று விரும்பினாலும் அதற்கு நிகரான ஒரு இலக்கு ஏன் அதை விட சிறப்பான ஒரு இலக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது இன்றைக்கு இந்தியா இருக்கிற சூழ்நிலையில் உலகிலேயே நம்ம தான் இந்த நாடுதான் மனித வளத்துக்கு ஒரு சப்ளையராக ஒரு ப்ரொடியூசர் ஆக நாடாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

இரண்டு பத்தாண்டுகளாக 20, 25 ஆண்டுகளாக சீனா ப்ரொடக்ஷன் மேனுஃபாக்சரிங் உற்பத்தியினால் அடைந்த வளர்ச்சியை இந்தியா அடுத்த ஒரு தலைமுறைக்கு 20 ஆண்டுகளுக்கு அடையாளம் காட்டும்  என்றால் அதனை  மனித வளத்தை உடைய மேம்பாட்டினால் தான் அடைய முடியும்.


இந்த மனித வளத்தை சிறப்பாக பயன்படுத்துவதற்கு கல்வி பயிற்சி, நான் முதல்வன் போன்ற  திட்டங்கள் கல்லூரிகளில் மாவட்ட ஆட்சியர் கூறினது போல் அந்த கோர்ஸ் உடைய கான்டெக்ட் சிலபஸ் தேவைக்கு ஏற்ப மாற்றுதல் இதெல்லாம் முக்கியம். 


அரசாங்கம் பல வகைகளில்  இந்த பணிகளை மிகவும் கவனத்துடன் எடுத்துக் கொண்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் ஆனால் ஒரு சமுதாயத்துக்கு சமமான வளர்ச்சி அனைவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கக் கூடிய வளர்ச்சி என்றால் குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் சிறப்பாக வளர வேண்டும் அவர்களுக்கு ஒரு நல்ல சுற்றுச்சூழல் இருக்க வேண்டும் இது உலக அளவில் பார்த்தீர்கள் என்றால் எப்படி சமத்துவம் வாய்ந்த ஜனநாயக நாடுகள் கனடா ஜெர்மனி ஆஸ்திரேலியா சிங்கப்பூர் இந்த மாதிரி இடத்துல பாத்தீங்கன்னா பெரிய பெரிய நிறுவனம் இருந்தாலும் குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் ஏராளமான கணக்கில் இருந்து கூடுதலாக வேலை வாய்ப்புகள் உருவாக்கக்கூடிய நிறுவனங்கள் இந்த எம் எஸ் எம் ஐ செக்டர்ல ஒரு வளர்ச்சி இருக்கணும் 


இந்திய அளவில் பார்த்தால் தமிழ்நாட்டில் இந்த மாதிரி குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு வாய்ப்புகளும் உதவியும் திட்டமும் கூடுதலாக இருப்பது நமக்கு ஓரளவுக்கு மகிழ்ச்சியும் திருப்தி  அளிக்கிறது  தவிர இதை இன்னும் சிறப்பிக்கலாம் என்பது  ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரு உண்மை. 


நான் நிதி அமைச்சராக இருக்கும் போது எல்லா திட்டங்களுக்கும் நிதி கொடுக்கும் போது திருப்பி திருப்பி நாங்கள் கூறினது எந்த அளவுக்கு கைடன்ஸ் எல்லாம் நம்ம கவனம் செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறு நடுத்தர நிறுவனங்கள் துவக்குபவர்களுக்கு சிங்கிள் விண்டோ சப்போர்ட்  பண்ணுவது தேவை என நம் மாநிலத்தில் இருக்கிற டேட்டாவை பார்த்த பெரிய மேனுஃபாக்சரிங் கம்பெனி நிறுவனங்கள பாத்தா ஏன் ஏற்கனவே போன ஆட்சியில் அறிவிக்கப்பட்ட இரண்டு முதலீட்டாள்கள் மாநாடு உடைய ஒப்பந்த புள்ளிகளுடைய சம்மரி டோட்டல் எடுத்து பார்த்தால் முழுமையாக எடுத்து பார்த்தா ஒரு வேலை உருவாக்குவதற்கு ஒரு வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கு அந்த மாநாடுகளில் சுமார் 30 லட்சத்திலிருந்து 50 லட்ச ரூபா முதலீடு தேவைப்பட்டு இருக்கு எத்தனை ஒப்பந்தம் போட்டாங்க அது எத்தனை கோடிக்கு முதலீடு எத்தனை வேலை வாய்ப்பு என்று எடுத்து வகுத்து பார்த்தால் ஒரு வேலை உருவாக்குவதற்கு  30 லட்சம் சில இடங்களில் ஒரு கோடி மக்கள் தொகை அரசாங்க தகவல் எடுத்து பார்த்தா ஒரு சிறு நடுத்தர நடுத்தர நிறுவனங்கள் சுமார் ஒன்றரை லட்சத்திலிருந்து 5 லட்ச ரூபாய்க்கு ஒரு வேலை வாய்ப்பை உருவாக்குவார்கள் முதலீட்டுக்கும் வேலை வாய்ப்புகளுக்கும் எண்ணிக்கையை வகுத்து பார்த்தால் புரியும். அதனால் இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில் இந்த துறைகளில் தான் இந்த செக்டரில்தான் கூடுதல் வேலை வாய்ப்பு உருவாக்கக்கூடிய சூழ்நிலை இருப்பதால் இதை நம்ம எந்த வகையில் எல்லாம் ஊக்குவிக்கணுமோ அதனை  செய்யணும் .  இந்த மாதிரி ஒரு கூட்டத்துல ஒரு நாள் சொல்றதை விட அந்த முகாம்கள் மாதிரி நடத்தி அந்தந்த ஏரியாவில் தொழில் முனைவோர்களை அழைத்து திட்டத்திற்கு முழு விளக்கம் கொடுத்தால் அது சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன் அந்தப் பணியை எந்த அளவிற்கு அரசு செய்வது முக்கியமோ மடீட்சியாபோன்ற  நிறுவனங்கள் செய்திட வேண்டும் .


மாவட்ட ஆட்சியர் சங்கீதா,மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த்,மண்டல தலைவர் புவனேஸ்வரி சரவணன்,மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் கணேசன்,துணை இயக்குநர் ஜெயா,திட்ட மேலாளர் முகம்மது மசூது , மடீட்சியா தலைவர் லெட்சுமி நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தொழில் நிறுவனங்கள் தொடங்கவும் தொய்வின்றி நடத்தவுமான அரசு சார் நடைமுறைகள், அரசு தரும் ஆதரவுகள், தொழில் நுட்பநிதி மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து உரிய வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மற்றும்  தொழில் துறையினர், வணிகர், தொழில் முனைவோர், கைவினைஞர், தொழில் வணிகவல்லுநர்கள், ஆலோசகர்கள், கல்வி நிறுவன வழிகாட்டிகள், சுய தொழில் ஊக்குநர்கள், ஆக்கமுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !