மதுரையில் தேசிய நரம்பியல் மாநாடு செப் - 14 முதல் நடைபெறவுள்ளது

Madurai Minutes
0

நரம்பியல் கழகத்தின் ஆதரவுடன் இந்திய நரம்பியல் கழகம் இந்த ஆண்டின் (2023) தேசிய நரம்பியல் மாநாட்டினை மதுரையில் நடத்தவுள்ளது. இது செப்டம்பர் 14.08.2023 முதல் 17.09.2023 வரை மதுரையில் அமைந்துள்ள மேரியாட் ஹோட்டலில் நடைபெறும்.


இந்த மாநாட்டிற்காக இந்தியா மட்டுமின்றி உலகில் பல்வேறுபகுதிகளில் இருந்தும் தோராயமாக 1100 நரம்பியல் மருத்துவர்கள் பங்கேற்கிறார்கள்.  40 உள்நாட்டு பேச்சாளர்களும் 13 அயல்நாட்டு பேச்சாளர்களும் நரம்பியல் தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.


இந்த அறிவியல் நிகழ்ச்சியானது நரம்பியல் துறையில் வலிப்புவாதம், மறதிநோய் மற்றும் தசை சிதைவு நோய், தலைவலி, நரம்புநோய் பல்வேறு உட்பிரிவுகளையும் நரம்பியல் மருத்துவத்தின் அடிப்படைகளையும் விரிவாக விவாதித்து நம்நாட்டு தரவுகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பலவாதங்கள் அரங்கத்தினர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.


செப்டம்பர் 14.09.2023 அன்று நடைபெறவுள்ள இதன் துவக்கவிழாவில் பேராசிரியர்,.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜீ.ஆர் மருத்துவ பழ்கலைக்கழகத்தின் துணைவேந்தரான கே நாரயணசாமி அவர்கள் தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார்.  மேலும் தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினரான பேராசிரியர், டாக்டர். கே. செந்தில் அவர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளார். உலக நரம்பியல் கூட்டமைப்பின் தலைவரான பேராசிரியர். டாக்டர். உலகேல் கிரிஸோல்டு அவர்கள் மற்றும் மதுரை மருத்துவ கல்லுரியின் முதல்வாரன பேராசிரியர்.  டாக்டர். அ. ரத்தினவேல் அவர்களும் கௌரவிக்கப்பட உள்ளனர். மேற்கூரிய துவக்கவிழா நிகழ்வினை இந்திய நரம்பியல் கழகத்தின் தலைவரான பேராசிரியர். டாக்டர். ககன்தீப் சிங் அவர்கள் மற்றும் இந்திய நரம்பியல் கழகத்தின் செயலாளரான டாக்டர். யு. மீனாட்சிசுந்தரம் அவர்களும் வழி நடத்தி தர உள்ளனர்.


இம்மாநாட்டின் முதல் நாள் அன்றே பக்கவாதத்தின்படுக்கை தீவிரத்தை வார்டுகளில் கண்டறிய  உதவும் கபால ஊடு கதிர் கருவி (Trans Cranial Doppler) குறித்த பயிலரங்கம் நடைபெறவுள்ளது. இதற்கு மூத்தநரம்பியல் மருத்துவர் பேராசிரியர். கே. சீனிவாசன் அவர்கள் தலைமை தாங்குகிறார்.


இம்மாநாட்டிற்க்கு வருகை தரவுள்ள பேச்சாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை மதுரையின் மூத்தநரம்பியல் பேராசிரியான மருத்துவர்  கே. ஸ்ரீனிவாசன் மற்றும் மதுரை மருத்துவக்கழகத்தின் தலைவர் மரு. மெய்கண்டன் செயலாளர் மரு. மணிவண்ணன் மற்றும் மதுரை மருத்துவகழகத்தின் உறுப்பினர்கள் சார்பாக வரவேற்கிறோம்.   


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !