மதுரையில் ஐசிடி அகாடமியின் 52வது பதிப்பான பிரிட்ஜ் மாநாடு

Madurai Minutes
0

ஐசிடி அகாடமி தனது 52வது பதிப்பான பிரிட்ஜ் மாநாட்டை 'டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான மனித மூலதனத்தை உருவாக்குதல்' என்ற கருப்பொருளில் 30 செப்டம்பர் 2023 அன்று மதுரையில் உள்ள கோர்ட்யார்டு பை மாரியட்டில் நடத்தியது. 


2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய தமிழகத்தின் பரந்த மனித மூலதனத்தைத் தட்டிச் செல்லும் நோக்கத்துடன், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்வாக இந்த மெகா தொழில் நிறுவன தொடர்பு நிகழ்வு நடந்தது.


மாண்புமிகு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் அமைச்சர் திரு. டாக்டர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 


தியாகராசர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் தலைவர் மற்றும் தாளாளரான திரு. ஹரி  தியாகராசன், தமிழ்நாடு ஐசிடி அகாடமியின் இயக்குநர் லக்ஷ்மி நாராயணன், காக்னிசன்டின் அரசு விகாரங்களின் தலைவர் புருஷோத்தமன் கே, மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமியின் தலைமைச் செயல் அதிகாரி, ஹரி பாலச்சந்திரன், ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். 


மாநாட்டில் பேசிய மாண்புமிகு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு. டாக்டர் பழனிவேல் தியாகராஜன் , “மூலைமுழுக்கெங்கும் இணைக்கப்பட்ட இன்றைய உலகில், டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான நமது மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களின் தெளிவான தொலைநோக்கு பார்வையுடன், தமிழ்நாடு அரசின்  தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை இயங்கிவருகின்றது. தற்போதைய உற்பத்தித்திறனை கடக்க வேண்டியதன் அவசியத்தை தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ளது. இந்த லட்சிய இலக்கை அடைய, உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், வளர்ந்து வரும் வர்த்தக முறைகள் மற்றும் தொழில்நுட்பத்தில் விரைவான முன்னேற்றங்கள் ஆகியவற்றிலிருந்து எழும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்த வேண்டும். கல்வி கற்கும் முறையை  மாற்றியமைக்கும் தேவை இருக்கிறது. இந்த இடைவெளியை குறைப்பதிலும் , குறிப்பாக "நான் முதல்வன்" போன்ற திட்டங்களிலும்  ஐசிடி  அகாடமி பாராட்டத்தக்க பங்குவகிக்கின்றது .  தொழில்துறை நிலப்பரப்பின்  தேவைகளை வழிநடத்தி, கல்வித்துறை மற்றும் தொழில்துறையின் ஒருங்கிணைப்பில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது. மதுரையில் ஐசிடி  அகாடமி அலுவலகம் விரைவில் நிறுவப்படவுள்ளது. ஐசிடி  அகாடமி மதுரையில் வருடாந்திரம்  பிரிட்ஜ் மாநாட்டை நடத்தி,  முன்னேற்றகரமான எதிர்காலத்தை வடிவமைத்து தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.” என்று கூறினார்.


மாண்புமிகு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு. டாக்டர் பழனிவேல் தியாக ராஜன் அவர்கள், புதுமையான மற்றும் லட்சிய முயற்சிகள் மூலம் உயர்கல்வித் துறையில் ஒரு அளவுகோலை உருவாக்கிய கல்வித் தலைவர்களுக்கு, ஐசிடி அகாடமி தொழில்முனைவோர் விருதுகளையும் வழங்கியுள்ளார். ஐசிடி அகாடமியின் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் அவற்றின் ஒருங்கிணைப்பாளர்கள் ஐசிடி அகாடமியின் சேவைகளை நல்ல பலன்களுடன் சிறப்பாகச் செயல்படுத்தி வருவோருக்கான விருதுகளும் வழங்கப்பட்டது .


இம்மாநாட்டின் முக்கிய அம்சங்கள்


• தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூலோபாயத்தின் மையத்தில் மனித மூலதனம்


• வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு நிறுவனங்களை சீரமைத்தல்


• எதிர்கால திறன்கள் மற்றும் திறமை வளர்ச்சி 


• நிலையான வணிக வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்கத்தை உறுதி செய்தல்


• கற்பித்தல்-கற்றல் செயல்பாட்டில் சிறந்த நடைமுறைகள்


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !