நீச்சல் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற ரயில்வே ஊழியருக்கு பாராட்டு

Madurai Minutes
0


 இந்திய ரயில்வேயில் 17 ரயில்வே மண்டலங்கள் இணைந்துள்ளன. தேசிய ய அளவில் ரயில்வே களுக்கு இடையான நீச்சல் போட்டி நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் மதுரை கோட்டத்தை சேர்ந்த திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் உள்ள குரும்பூர் ரயில் நிலைய பயண சீட்டு அலுவலர் எமில் ராபின் சிங் 8 பதக்கங்கள் வென்றுள்ளார். நான்கு தங்க பதக்கங்கள், இரண்டு வெள்ளி பதக்கங்கள், இரண்டு வெண்கல பதக்கங்கள் வென்று சாதனை புரிந்துள்ளார். இவரது சாதனையை அறிந்த மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் அவரை அழைத்து பாராட்டி மகிழ்ந்தார். அவருடன் முது நிலைக் கோட்ட வர்த்தக மேலாளர் ரதிப்பிரியா, கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன், உதவி ஊழியர் நல அதிகாரி எம். இசக்கி ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !