எக்ஸ்ஆர் டெக்னாலஜி மூலம் பெயிண்டிங் பயிற்சி அளிக்கும் நிப்பான்

Madurai Minutes
0

ஆசியாவின் உண்மையான நம்பர் 1 பெயிண்ட் உற்பத்தியாளரான நிப்பான் பெயிண்ட் தமிழ்நாட்டின், மதுரையில்   புரோசீட் பயிற்சி அகாடமி தொடங்கியது. இங்கு பெயிண்டர்களுக்கு  விர்சுவல் ரியாலிட்டி (எக்ஸ்ஆர்) டெக்னாலஜி மூலம் பெயிண்டிங் பயிற்சி அளிக்கப்படுகிறது.


நிப்பான் பெயிண்டின் இந்த புதிய முயற்சியானது, பெயிண்டர்களுக்கு 6 நாள் பாடத்திட்டத்தை வழங்குகிறது. இந்தப் பயிற்சியின்போது, நிப்பான் பெயிண்ட் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிற்சி அளிக்கப்படும். ஸ்ப்ரே-பெயிண்டிங் மெஷின்கள் (100 சதவிகிதம் தூசி இல்லாத இயந்திரங்கள்) போன்ற உயர்தரக் கருவிகளைப் பயன்படுத்த அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும். இத்தகைய நவீனமயமாக்கப்பட்ட பெயிண்டிங் அனுபவம் வாடிக்கையாளர்களுக்கு பெயிண்டிங்கை ரசிக்க உதவும் என்று நிப்பான் பெயிண்ட் உணர்கிறது.


மதுரை பயிற்சி மையத்தில் 2000 பெயிண்டர்களுக்கு பயிற்சி அளிக்கவும், சான்றிதழ் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் வரும் 150 பேருக்கு இலவச பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பெயிண்ட்கள் வழங்கப்படும். மேலும் பெயிண்டிங்கிற்கு தேவையான இயந்திரத்தை மானிய விலையில் வழங்கப்படுகிறது என்று  நிப்பான் பெயிண்ட் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (அலங்காரப் பிரிவு) தலைவர் மகேஷ் ஆனந்த் தெரிவித்துள்ளார்.


அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அளிக்கப்படும் இந்த பயிற்சியானது, மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.  இந்தத் திட்டத்தில் தேர்ச்சி பெறும் பெயிண்டர்கள் தங்கள் பெயிண்டிங் நேரத்தை 60 சதவீதம் வரை குறைத்து, பெயிண்ட் இழப்பைக் குறைத்து, மேற்பரப்பு பூச்சை திறம்பட பூசி அவர்களின் திட்டங்களை முழுமையை மேம்படுத்த முடியும். இதன் மூலம் இந்திய பெயிண்டர் சமூகத்திற்கு சிறந்த வணிக வாய்ப்புகள் மற்றும் பல வேலைகள் கிடைக்கும்., என்று  மதுரையில் பெயிண்டர் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்த மண்டல விற்பனை மேலாளர் ஆர். சீனிவாசன் மற்றும் நிப்பான் பெயிண்ட் இந்தியா நிறுவனத்தின் மார்காம் துணைப் பொது மேலாளார்  ஹரிஹர சுதன் ஆகியோர் தெரிவித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !