தன்னிச்சையாக அரசு பேருந்து இயக்கிய ஓட்டுநர் திரு.எஸ்.முருகேசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Madurai Minutes
0

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தேனி மாவட்டம் லோயர் கேம்ப் கிளையில் பணிபுரியும் திரு.எஸ்.முருகேசன் ஓட்டுநர் பணி எண் 55121 அவர்கள் பல நேரங்களில் கழக பேருந்தை சரியாக இயக்காமல் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியும், அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதற்காகவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட ஓட்டுநர் திரு.எஸ்.முருகேசன் அவர்கள் நத்தம் கிளையில் 21.01.2016 அன்று பணிபுரிந்தபோது பேருந்தை திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனத்தை நிறுத்தி சென்றுவிட்டார். அதேபோல் 06.08.2016 தேதியன்று வத்தலகுண்டு கிளையில் பணிபுரியும் போது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தி இருவர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்துள்ளார். தொடர்ந்து 28.06.2017 மற்றும் 25.05.2018 ஆகிய தேதிகளில் பேருந்தை கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் இயக்கியதால் உயிர் சேதமும், பெரும் பொருள் சேதமும் ஏற்பட்ட காரணத்தினால் கழகத்தின் சார்பில் இவர் மீது நடவடிக்கை ஏடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-2022 ஆம் ஆண்டுகளில் மிக குறைந்த நாட்களே பணிக்கு வருகைதந்தது அல்லாமல் அந்த நாட்களில் பொது மக்களுக்கும், கழகத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்தி உள்ளார். 04.11.2022 அன்று குமுளி-ராமேஸ்வரம் வழித்தடத்தில் பேருந்தை இயக்கும் பொழுது ராமேஸ்வரம் செல்லாமல் இராமநாதபுரத்திலேயே பேருந்தை நிறுத்தி சென்றதினால் பொதுமக்களுக்கு இடையூறும், கழகத்திற்கு இழப்பீடும் ஏற்படுத்தி உள்ளார்.

மேலும் 13.12.2022 அன்று திருச்சி-குமுளி வழித்தடத்தில் இயக்கும்போது வழித்தடம் மாறி திண்டுக்கல்லுக்கு சென்று அங்குள்ள போக்குவரத்து ஆய்வாளரிடம் தகாத முறையில் நடந்தது மட்டுமல்லாமல் குமுளிக்கு செல்ல வேண்டிய பேருந்தை தன்னிச்சையாக லோயர்கேம்ப் வரை மட்டும் பேருந்தை இயக்கி பணிமனையில் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் பேருந்தை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார்.

 தொடர்ந்து 14.12.2022 அன்று TN57 N 1989 என்ற பேருந்தில் அன்றைய தினம் பணிக்கு செல்லவேண்டிய ஓட்டுநர் திரு.T.கண்ணன் என்பவரை பணிக்கு வரவேண்டாம் என தடுத்திவிட்டு கிளை மேலாளர் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் ஆகியோரது அனுமதியின்றி தன்னிச்சையாக மேற்படி பேருந்தினை லோயர்கேம்ப்-லிருந்து எடுத்துச்சென்று பயணிகளை திண்டுக்கல் பேருந்து நிலையம் செல்லும் வழியில் இறக்கிவிட்டு பேருந்தை வட்டார போக்குவரத்து அலுவல்கம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச்சென்று செய்தியாளர்கள் மற்றம் அலுவலர்களிடம் பேருந்தை பற்றிய தவறான செய்தி அளித்து அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தி உள்ளார்.

ஓட்டுநர் திரு.எஸ்.முருகேசன் அவர்கள் தனது பணியின் போது இது போன்று ஒழுங்கீனமான நடவடிக்கையில் ஈடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளதோடு தொடர்ந்து பொதுமக்களுக்கு அசௌகரியமும், கழகத்திற்கு அவப்பெயரும் ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக ஒரு சங்கத்தின் மாநில பொறுப்பாளராக இருந்துகொண்டு அதே தவறை மீண்டும் மீண்டும் செய்து வருவதால் அவர் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

மேலாண்மை இயக்குனர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், 

மதுரை.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !