மாற்றுத்திறனாளிகள் முன்னேற வேண்டும் என்பதே தளபதியார் எண்ணமாகும்

Madurai Minutes
0


மதுரை, ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் இன்று (03.12.2022) மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பாக நடைபெற்ற “அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா“-வில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இவ்விழாவில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் பேசியதாவது:

மாண்புமிகு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது நேரடி கண்காணிப்பில் நிர்வகித்து பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல், மாதாந்திர உதவித்தொகை வழங்குதல், உதவி உபகரணங்கள் வழங்குதல், சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குதல் போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு அளவீட்டு முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டன.

ஆண்டு தோறும் டிசம்பர் 3-ஆம் நாள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, அவர்களுக்கான உரிமைகளை பாதுகாப்பது நம் அனைவரது கடமை. மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் பொருளாதாரத்திலும், தொழில்துறையிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேற வேண்டும் என்பதே மாண்புமிகு தளபதியார் அவர்களின் எண்ணமாகும். அந்தவகையில் மாண்புமிகு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான இந்த அரசு மாற்றுத்திறனாளிகள் நலனை பாதுகாக்கின்ற அரசாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது  என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் பேசினார்.

இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் 20 பணனாளிகளுக்கு ரூபாய் 8 இலட்சத்து 68 ஆயிரத்து 570/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள், மதுரை மாநகராட்சி மேயர் திருமதி இந்திராணி பொன்வசந்த் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.சிம்ரன் ஜீத் சிங்,இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.பூமிநாதன் அவர்கள், மாநகராட்சி மண்டலத் தலைவர் திரு.கி.முகேஸ் சர்மா அவர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.இரா.இரவிச்சந்திரன் அவர்கள், தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழக பொது மேலாளர் திரு.ஆ.ஆறுமுகம் அவர்கள், ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி முதல்வர் திருமதி.சு.வானதி அவர்கள், மாமன்ற உறுப்பினர் திருமதி.லோகமணி அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !