மன ஆரோக்கியம் குறித்த தவறான கருத்தை குறைக்க மெடிக்ஸ் க்ளோபல் மற்றும் எம்பவர் ஒன்றிணைகிறது

Madurai Minutes
0

உலகளாவிய சுகாதார மேலாண்மை நிறுவனமான மெடிக்ஸ்,  300க்கும் மேற்பட்ட உள்ளக மருத்துவர்கள் மற்றும் 4,500க்கும் மேற்பட்ட உலக முன்னணி நிபுணர்களைக் கொண்ட உலகளாவிய தர அங்கீகாரம் பெற்ற நெட்வொர்க் குழுவுடன், ஒரு மூலோபாய கூட்டாண்மைக்குள் நுழைந்துள்ளது. 

எம்பவர் உடனான இந்தியாவின் மனநலத் துறையில் முன்னணியில் இருக்கும் ஆதித்யா பிர்லா கல்வி அறக்கட்டளையின் முன்முயற்சியின் மூலம் 600 அனுபவமிக்க மனநல நிபுணர்களை ஒன்றிணைத்து 121 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனநல ஆரோக்கியம் சம்மந்தமான சேவைகளை வழங்கி வருகிறது. ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, எம்பவர் மற்றும் மெடிக்ஸ் ஆகியவை இந்தியாவில் மனநலச் சேவைகளை இன்னும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு ஒருங்கிணைந்த மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும்.இந்த கூட்டாண்மை இந்தியாவில் மனநல ஆரோக்கியம் குறித்த கருத்துக்களை மக்களிடையே மாற்றும். குறிப்பாக இது நாட்டின் இளைஞர்களை சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மூலோபாய கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, மெடிக்ஸ் இந்தியா, எம்பவரின் மனநல சேவைகளை அதன் பல்வேறு பராமரிப்பு திட்டங்களில் இணைக்கும். முன்னணி காப்பீட்டாளர்கள், கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு எம்பவர் கிளினிக்குகள் மற்றும் மெய்நிகர் மனநல சேவைகளுக்கான அணுகலை அதன் வாடிக்கையாளர்களுக்கும் கூட்டாளர்களுக்கும் வழங்குகிறது. மனநல ஆதரவைத் தேடும் நோயாளிகளுக்கு பல்வேறு நிரூபிக்கப்பட்ட மனநலத் தீர்வுகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கும், அதேசமயம் மெடிக்ஸ் தர உத்தரவாதம், இலக்கை நிர்ணயித்தல், மருத்துவப் பாதைகள், டிஜிட்டல் மன மற்றும் உடல் மதிப்பீடுகள் மற்றும் விளைவுகளை அளவிடுதல் மற்றும் பகுப்பாய்வு போன்றவற்றிற்கான புதுமையான கருவிகள் ஆகியவற்றில் அதன் உலகளாவிய நிபுணத்துவத்தை வெளிப்படுத்தும்.

கூட்டாண்மை குறித்து பேசிய எம்பவரின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் நீரஜா பிர்லா, "இந்த கூட்டாண்மை மீண்டும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துபவராக நமது நிலையை உறுதிப்படுத்தும் ஒரு படியாகும். உடல் நலம், மனநலம் மற்றும் சமூக காரணிகள் என சிக்கலான தொடர்பு காரணமாக மருத்துவ பிரச்சனைகள் கொண்டவர்களிடையே மனநல பிரச்சனைகள் மிகவும் பொதுவானவை. இப்போது ஒரே தளத்தில் உடல் மற்றும் மனநலச் சேவைகளைத் நோயாளிகளுக்கு வழங்கும் இந்த ஒத்துழைப்பு முழுமையான மருத்துவத் தீர்வுகளை வழங்குகிறது. இதுபோன்ற ஒத்துழைப்புகள் இந்தியாவில் சுகாதாரத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் மற்றும் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு சமமான முக்கியத்துவத்தை வழங்கும் என்று நம்புகிறோம்”, எனத் தெரிவித்தார்.

"எம்பவர் உடன் கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இரண்டு பிராண்டுகளுக்கும் இடையே வலுவான சீரமைப்பு உள்ளது. இது மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.  மன ஆரோக்கியம் குறித்த தவறான கருத்தை விலக்கி, சவால்களை சமாளிக்க உறுதியான மற்றும் செயல்படக்கூடிய கருவிகளை வழங்கும் அதே வேளையில் மனநலம் குறித்த உரையாடல்களையும் விவாதங்களையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்று மெடிக்ஸின் தலைவரும், சிஇஓ-வுமான சிகல் அட்ஸ்மோன் கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !