மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி தேர்வுகள்

Madurai Minutes
0

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கத்தின் நவம்பர் 2022 மற்றும் ஏப்ரல் 2023 ற்கான பருவம் /அல்பருவம் / அரியர், இரண்டு தேர்வுகளும் ஒன்றாக ஜூன் மாதம் 2023-ல் நடைபெற உள்ளன. தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் அனைவரும் MKU-DDEன் இணையதள முகவரியின் வாயிலாக www.mkudde.org பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேர்விற்கான இணைய வழி விண்ணப்பங்கள் 19.04.2023 ஆம் தேதியிலிருந்து பெறப்படுகின்றன. தாமதக் கட்டணமின்றி விண்ணப்பிக்க கடைசி நாள் 04.05.2023. ரூ.500 தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க கடைசி நாள் 12.05.2023. தேர்வுகள் தொடங்கும் நாள் 01.06.2023.

அகமதிப்பீட்டு ஒப்படைப்பு அவசியமானதாகும். அகமதிப்பீடு ஒப்படைப்பு (Internal Assignment Submission) தொடர்பான தகவல்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தைக் காணவும்.

UG / PG / MBA / MCA /PG Dip பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் தாங்களின் திட்ட படிகளை (Project report) 30.05.2023க்குள் "கூடுதல் தேர்வாணையர், தொலைநிலைக் கல்வி இயக்ககம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை" என்ற முகவரியில் சமர்ப்பிக்கப் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பத்து இலக்க பதிவெண்கள் கொண்ட (13 series) மற்றும் அதற்கு முந்தைய பதிவெண்களை உடைய பழைய மாணவர்கள் அனைவரும் அவர்களுடைய தேர்ச்சி பெறாத பாடங்களை (அரியர்) எழுதுவதற்கு இதுவே கடைசி வாய்ப்பாகும்).

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !