அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கேம்பஸ் டெக்னாலஜியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

Madurai Minutes
0

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கேம்பஸ் டெக்னாலஜியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.  அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அதன்கற்பித்தல்-கற்றல், மதிப்பீடு, அங்கீகாரம், தரவரிசை  மற்றும் பிறகல்வி  சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் டைம்ஸ் இன்டர்நெட், டைம்ஸ்ஆஃப் இந்தியா குழுமத்தின் போர்ட்ஃபோலியோ நிறுவனமான கேம்பஸ் டெக்னாலஜியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அண்ணாமலைப்  பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முதுமுனைவர். ஆர். எம்.கதிரேசன் முன்னிலையில், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 02.05.2023 அன்று பதிவாளர் முனைவர் .ஆர்.சிங்காரவேல் மற்றும் கேம்பஸ் டெக்னாலஜி இயக்குநர் திரு.சுமன்நந்தி ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது. 


இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, கேம்பஸ் டெக்னாலஜி அதன் மொத்த தரமதிப்பீடு (TQA) மென்பொருளை வழங்கும். கேம்பஸ் டெக்னாலஜியால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவினால் இயங்கும் இந்த மென்பொருள் அரசாங்கப் பல்கலைக் கழகங்களுக்கு தர மேலாண்மை, தர மேம்பாடு மற்றும் தரக் கண்காணிப்பு ஆகியவற்றில் உதவுவதற்காக தனித்துவமாக தயாரிக்கப்பட்டது ஆகும். ஆன்லைன் வலை போர்டலைப் பயன்படுத்தி அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் தரவு சேகரிப்பு, அங்கீகாரத் தரவை நிர்வகித்தல், செயற்கை நுண்ணறிவினால் தரவு மற்றும் ஆவணங்களை சரிபார்த்தல், இணையதளத்துடன் இணைத்தல், நிலை கண்காணிப்பு அறிக்கைகளை உருவாக்குதல் போன்றவற்றுக்கு இந்த மென்பொருள் உதவுகிறது. மேலும், கேம்பஸ் டெக்பல்கலைக்கழகத்திற்கு இணைப்பு மேலாண்மை மென்பொருளை வழங்கும், இது பல்கலைக் கழகத்துடன் இணைந்த கல்லூரிகள் தரவு மற்றும் ஆவணங்களை ஒருங்கிணைக்கப்பட்ட போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய உதவும். இந்த தொகுதிபின்னூட்டம்,  LMS, மற்றும் தேர்வு மேலாண்மை அமைப்புகளுடன் செயல்படுத்தப்பட உள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் உள்தர உறுதிப்பிரிவு (IQAC), கல்லூரி மேம்பாட்டு கவுன்சில் (CDC) மற்றும் கல்விக்கான சர்வதேச மற்றும் தேசிய ஒத்துழைப்புபிரிவு (INCARE) ஆகிய துறைகள் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான ஏற்படுகளை செய்துவருகின்றன.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !