மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நாகர்கோவிலில் புதுபிக்கப்பட்ட ஷோரூமை இன்று திறந்துள்ளது

Madurai Minutes
0

உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால்பதித்து தனது வர்தகத்தை விரிவாக்கி கொண்டு உள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் தனது புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை இன்று நாகர்கோவிலில்  திறந்துள்ளது. 


புதுப்பிக்கப்பட்ட ஷோரூமில் இரண்டு தளங்களில் அதிகமான இடவசதி, கலெக்சன்கள், டிசைன்கள் ஆகியவை இந்த ஷோரூமில் இடம் பெற்றுள்ளன. புதுப்பிக்கப்பட்ட இந்த ஷோரூமை தமிநாடு சட்ட பேரவைத்  தலைவர் மாண்புமிகு. திரு.மு.அப்பாவு  அவர்கள் திறந்து வைத்தார்.  


திறப்பு விழாவில் திரு.யாசர் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர்), திரு.சபீர்அலி (மலபார் கோல்டு தமிழ்நாடு மண்டல வணிக தலைவர்), திரு.அமீர் பாபு  (மலபார் கோல்டு தமிழ்நாடு வடக்கு  மண்டல தலைவர்), திரு.சுதிர் அகமது   (மலபார் கோல்டு தமிழ்நாடு கிழக்கு  மண்டல தலைவர்),திரு.ரினித்  (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நாகர்கோவில் கிளை தலைவர்),  மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட  சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர்,காரைக்குடி, ஆகிய நகரங்களில் 22 கிளைகளை கொண்டுள்ளது.


இந்த ஷோரூமில் ஏராளமான தங்கம், வைரம், மற்றும் வெள்ளி, நகைகளின் தொகுப்புகள் உள்ளன. மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைரநகைகளான ‘மைன்’ பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாதவைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினைகலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகைவடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை இந்த ஷோரூமில் இடம் பெற்றுள்ளன.


மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் பற்றி:


நாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் வர்த்தக குழுமங்களில் ஒன்றான மலபார் குழும நிறுவனங்களின் முன்னணி பிரிவுதான் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் ஆகும். இந்தியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் சில்லறை விற்பனை பிரிவில் உள்ள இந்த நிறுவனம் பிஐஎஸ் சான்று பெற்ற 916 தங்க நகைகளையும் ஐஜிஐ சான்று பெற்ற வைர நகைகளையும் பிஜிஐ சான்று பெற்ற பிளாட்டிண நகைகளையும் ஹால் மார்க் சான்று பெற்ற வெள்ளி நகைகளையும் மட்டுமே விற்பனை செய்கிறது. 


அனைத்து நகைகளும் வெளிப்படையான விலை, நிகரஎடை, கற்களின்எடை, சேதாரம், கற்களுக்கான விலை, அதன் நிகர எடை ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடும் பட்டியலுடன் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நகையின் தயாரிப்பு குறித்தும் விலையையும் எளிதாக புரிந்து கொண்டு வாங்குவதற்கு திட்டமிடலாம். வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு, அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானலும் திரும்ப பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இவை தவிர மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூகப்பொறுப்பு முன்முயற்சிகள் இதர காரணங்கள் ஆகும். 


தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !