சுற்றுலா தொடர்புடைய நிறுவனங்கள் அரசு பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடு

Madurai Minutes
0
மதுரை மாவட்டத்தில் அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில் தொடங்கவுள்ள சுற்றுலா தொடர்புடைய நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் பதிவு செய்து கொள்ள பத்திரிகை செய்தி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை சுற்றுலாத்துறையில் பதிவு செய்யாமல் பல சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.


அதன்படி, மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மேற்கண்ட சுற்றலாத் தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்க உள்ள சுற்றுலா தொழில் நிறுவனங்கள் www.tntourismtors.com  என்ற இணையதளம் மூலம் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


மேலும்,  வழிகாட்டு நெறிமுறைகளை பெறுவதற்கும், கூடுதல் விவரங்களுக்கும் சுற்றுலா அலுவலகம், 1, மேல வெளி வீதி, மதுரை-625 001 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட சுற்றுலா அலுவலர் அவர்களின் தொலைபேசி எண்.0452 – 2334757-க்கு தொடர்பு கொண்டும், touristofficemadurai@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவும் தகவலினை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !