மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம்

Madurai Minutes
0

மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக பைபாஸ் சாலையில் உள்ள தலைமை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு.ஆறுமுகம் அவர்கள் தலைமையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை, மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் திடீர் நகர், மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஹானா ஜோசப் மருத்துவமனை, வாய்ஸ் டிரஸ்ட், சுஜி ஹெல்த் கேர் சிஸ்டம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம் 28.07.2023 அன்று நடைபெற்றது.


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு.ஆறுமுகம் அவர்கள் முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:-


மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் சட்டசபையில் போக்குவரத்து மானியக்கோரிக்கையில் அறிவித்துள்ளபடி சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் இரத்த வகை, இரத்த அழுத்தம், ECG. ECHO, கண் பரிசோதனை, காசநோய் பரிசோதனை போன்ற மருத்துவ பரிசோதனைகள் கழகத்தில் பணியாற்றி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு செய்யப்பட்டது.


மதுரை மண்டலத்தில் 890 பேருந்துகளில் 1.68 கோடி மகளிர்கள் கடந்த மாதத்தில் மட்டுமே பயணம் செய்துள்ளார்கள். 5.50 இலட்சம் மகளிர்கள் கட்டணமில்லா பேருந்தில் தினசரி பயணம் செய்கிறார்கள். ஆடி மாதத்தை முன்னிட்டு மதுரை சுற்றியுள்ள அம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மதுரை கோட்டத்தில் உள்ள 40 கிளைகளில் பணியாற்றிவரும் 14000-க்கும் மேற்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு மருத்துவ சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக கண் பரசோதனை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு.ஆறுமுகம் அவர்கள் பேசினார்.


இம்முகாமில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரையின் முதுநிலை துணை மேலாளர்(மனிதவள மேம்பாடு) திரு.S.இளங்கோவன், பொது மேலாளர்(தொறு- கூட்டாண்மை) திரு.K.சமுத்திரம், மதுரை மண்டல பொது மேலாளர் திரு.CK.ராகவன், இணை இயக்குனர் (மக்கள் தொடர்பு) திரு.R.பாஸ்கரன், அலுவலக மக்கள் தொடர்பு அலுவலர் திரு.G.சந்தானகிருஷ்ணன், சுஜி ஹெல்த் கேர் சிஸ்டம் இயக்குநர் திரு.முருகேசன், அரசு மருத்துவமனை மருத்துவர் திரு.ஜிந்தா, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் திரு.சுரேஷ். திரு.அமர்நாத், திருமதி தனலெட்சுமி, ஹானா ஜோசப் மருத்துவமனை மருத்துவர்கள் திரு.கில்பட் ஜோசப், திரு.S.ஜெகன், திரு.D.P.ராஜா, திரு.R.சேகர், மாநகராட்சி நகர்புற மருத்துவ பணியாளர்கள திருமதி இந்திரா தேவி திருமதி வாணி, திருமதி ஜெயந்தி மற்றும் போக்குவரத்து கழக தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !