கொடநாடு வழக்கு குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசு அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக அரசு

Madurai Minutes
0

அதிமுகவில் குழப்பம், இடையூறு ஏற்படுத்தியவர்களுககு  சரியான சம்பட்டி‌ அடியான தீர்ப்பை நீதிமன்றம் கொடுத்துள்ளது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி


கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு புரட்சித்தமிழர் பட்டம் வழங்கிய தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணி உள்ள செய்தியாளர் அரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார் .இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே.தமிழரசன், எம்.வி.கருப்பையா, மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் மகேந்திர பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன் உட்பட பலர் கலந்து  கொண்டனர். 


ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது


ஜனநாயகத்தை காப்பாற்றும் களபோரளியாக எடப்பாடியார் உரிமைகுரல் எடுத்து வருகிறார். மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சி மலர அனைவரும் போராட்டம் செய்தனர். ஆனால் தற்போது பின்வாசல் வழியாக மீண்டும் மன்னராட்சி வளர்ச்சி அடைய முயற்சிக்கிறார்கள் இது இந்திய தேசத்திற்கு பேரபத்தாகும் மீண்டும் ஜனநாயகம் மலர எடப்பாடியார் முதலமைச்சர் வரவேண்டும் மக்கள் நினைக்கிறார்கள்.

ரோம் நகர் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல, இன்றைக்கு சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, காய்கறி விலை உயர்வு  இதைப் பற்றி எல்லாம் ஸ்டாலின் கவலைப்படவில்லை.


ஒன்று முதல் பத்தமாம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை புரட்சித்தலைவர் வழங்கினார், அந்த சத்துணவு திட்ட புகழை அழிக்க முயற்சி செய்து வருகின்றார்கள். தற்போது எந்த கட்டமைப்பு இல்லாமல் தற்காலிகமாக காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். இதைப் பற்றி நான் குறை சொல்லவில்லை ஆனால் சத்துணவு திட்டமே நின்று விடுமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. சத்துணவு திட்ட பணியாளர் யாரும் இதில் பயன்படுத்தப்படவில்லை.


54 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணித்திட்டத்தை வழங்கினோம், 13 லட்சம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம்  திட்டத்தை வழங்கினோம். ஆனால் அதையெல்லாம் மூடு விழா கண்டு சில திட்டங்களுக்கு திறப்பு விழா காண்கிறார்கள்.மேலும் தேர்தல் அறிக்கையில் கல்வி கடன் ரத்து, நீட் தேர்வு என்று பச்சை பொய் பேசினார்கள் எதையும் நிறைவேற்றவில்லை.


தமிழக சட்டசபையில் உள்துறைக்கான மானிய கோரிக்கையில், கொடநாடு கொலை வழக்கு குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் தெளிவான விளக்கத்தை கூறியுள்ளார் அந்த குறிப்பு எல்லாம் சட்டமன்றத்தில் உள்ளது.


அதில் கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசு. ஆனால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக அரசு .குற்றச்சாட்டப்பட்ட குற்றவாளியுடன் திமுக முதலமைச்சர் அருகில் நின்று புகைப்படம் எடுத்திருக்கிறார். கேரளாவில் உள்ளவர்க்கு இங்கு இருக்கும் வழக்கறிஞர் எப்படி ஜாமீன் பெற்றார். தொடர்ந்து கடத்தல், கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி கொடும் குற்றம் புரிந்தவர்களுக்கு  திமுகவைச் சேர்ந்தவர்கள் எப்படி ஜாமீன்தார்களாக இருந்தார்கள்.


அவர்களுக்கும் திமுகவுக்கும் என்ன தொடர்பு, அவர்கள் விடுதலை செய்ய வாதாடிய திமுக வழக்கறிஞர்களை நீலகிரி சார்பு நீதிபதியாக நியமித்திருக்கின்றனர்.இதில் மர்மம் இருக்கிறது  என தெளிவாக கூறியுள்ளார் இது சட்டமன்ற பதிவில் உள்ளது.


இரண்டு நிகழ்வுகள் உலகம் முழுவதுமாக பேசப்பட்டு வருகிறது ஒன்று சந்திராயன் 3 நிலவில் வெற்றி பெற்றது,மற்றொன்று எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற மாநாடு வெற்றியை பேசப்பட்டு வருகிறது. இதையெல்லாம் திசை திருப்ப காலவதியானவர்கள் சிலர் பேசி வருகிறார்கள் இவர்களுக்கு தோல்விதான் பரிசாக கிடைக்கும்.

ஜனநாயகத்திற்கு எந்த பின்புலம் இல்லாமல் இன்று எடப்பாடியார் உயர்ந்துள்ளார். இன்றைக்கு சிலர் பேசி வருவதில் எள் முனையும் உண்மை இல்லை. 


அதுமட்டுமல்லாது இன்றைக்கு திமுகவின் பி.டீமாக பன்னீர்செல்வம் உள்ளார்கள் எடப்பாடியார் தலைமையில் மதுரையில் நடைபெற்ற நாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் திமுகவை கண்டித்து பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.


ஆனால் திருச்சியில் பன்னீர்செல்வம் மாநாடு நடத்தினார். திமுகவுக்கு எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதிமுகவின் மாநாடு, கூட்டம் என்று சொன்னால் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆகியோர் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறியும், திமுகவை மக்கள் விரோத   செயல்களை தோல் உரித்து காட்டுவது தான் தார்மீக கடமை , அந்த தார்மீக கடமையில் இருந்து அவர்கள் விலகிச் சென்று விட்டார்கள்.


இதே திருச்சி கூட்டத்தில் திமுக பற்றி கண்டித்து இருந்ததை ஆதாரத்தை நிரூபித்தால் நான் என் பொது வாழ்க்கையில் இருந்து விலக தயார். 


இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடு வகையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கூறியதாவது,


ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஒரு சிறப்பான தீர்ப்பை எடப்பாடியாருக்கு  வழங்கியுள்ளது .பிறகு மக்களை குழப்பும் வண்ணம், இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் தொடுத்த வழக்கில், இன்றைக்கு நீதிமன்றம் சரியான சம்பட்டி அடியான தீர்ப்பை வழங்கி உள்ளது.


இன்றைக்கு உலகத் தமிழனின் ஜனநாயகத்தின் அடையாளமாக எடப்பாடியார் திகழ்கிறார். மதுரை மண் ராசியான மண், இங்கு  எடப்பாடியார் மாநாட்டை நடத்தியதால் இந்த வழக்கில் வெற்றி கிடைத்துள்ளது .இந்த வெற்றி என்பது நியாயமான வெற்றி, சத்தியத்தின் வெற்றியாக உள்ளது என்று அனைத்து தரப்பு மக்களும் கூறுகிறார்கள்.


இன்றைக்கு தமிழகத்தில் ஜனநாயகம் செத்துவிட்டது இந்த ஜனநாயகத்தை மீட்டெடுத்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் எடப்பாடியார் கொண்டு செல்வார்.


இன்றைக்கு திமுக ஆட்சியில் பெயர் சூட்டும் விழா தான் நடக்கிறது. மக்களின் நல்ல பெயர் எடுப்பது  நடைபெறவில்லை. மேலும் தன் மகனை முடிசூட்டும் மேடைக்கு தான் அமைத்து வருகிறார் தவிர ஜனநாயகத்தை பற்றி கவலை இல்லை.மக்கள் உரிமையை பற்றி கவலை இல்லை.


நிச்சயம் எடப்பாடியார் கோட்டைக்குப் போவார், ஸ்டாலின் வீட்டுக்கு போவார். இன்றைக்கு அதிமுகவிற்கு எதிராக சென்றவர்கள் அரசியல் அனாதையாக தான் உள்ளார்கள் என்பதை வரலாற்றை பார்த்தாவது இனிமேல் திருந்திக் கொள்ள வேண்டும் இங்கே குழப்பத்திற்கு எந்த வேலையும் இல்லை எனக் கூறினார். 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !