அஞ்சல் துறை 2994 கிராம அஞ்சல் ஊழியர் காலிப் பணியிடங்களை நிரப்புகிறது

Madurai Minutes
0

அஞ்சல் துறை தமிழ்நாடு வட்டத்தில்  2994 கிராம அஞ்சல்  ஊழியர்கள் (ஜிடிஎஸ்)  காலிப்  பணியிடங்களை  நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த காலிப் பணியிடங்களில், சென்னை நகர மண்டத்தின் கீழ், 607  பணியிடங்களில்  பணிபுரிய  தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிக்கப்பட்ட பதவிகளின்  வகைகள் பின்வருமாறு:


 வகை - நேரம்  தொடர்பான  படி (டிஆர்சிஏ)


கிளை அஞ்சல் அதிகாரி - ரூ. 12,000 - 29,380


துணை கிளை அஞ்சல் அதிகாரி / கிராம அஞ்சல் ஊழியர் - ரூ. 10,000 - 24,470


விண்ணப்பங்களை  ஆன்லைனில் https://indiapostgdsonline.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம். இணைய தளத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 23.08.2023.


கல்வித்தகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் இதர தகுதி நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://indiapostgdsonline.gov.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !