மதுரையில் இருந்து ஹைதராபாத், மும்பை, கோவா சுற்றுலா ரயில்

Madurai Minutes
0

ஹைதராபாத், மும்பை, கோவா "தட்சிண அதிசயங்கள்" சுற்றுலா ரயில் மதுரை கூடல்நகரிலிருந்து செப்டம்பர் 28 அன்று மாலை 4 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், திருநெல்வேலி, திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பாலக்காடு, ஈரோடு, சேலம் வழியாக சென்று செப்டம்பர் 30 அன்று காலை 07.00 மணிக்கு தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத் அருகே உள்ள மௌலாலி சென்று சேரும். 


அங்கு சார்மினார், கோல்கொண்டா கோட்டை, ராமோஜி பிலிம் சிட்டி ஆகியவற்றைப் பார்த்து அங்கிருந்து ரயில் அக்டோபர் 1 அன்று இரவு 8 மணிக்கு அவுரங்காபாத் புறப்படும். அவுரங்காபாத்தில் அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களை பார்த்து ரயில் அங்கிருந்து அக்டோபர் 3 அன்று இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு அக்டோபர் 4 காலை 08.30 மணிக்கு மும்பை சென்று சேரும். 


மும்பையில் ஜுஹு கடற்கரை, தொங்கும் தோட்டம், கேட் வே ஆப் இந்தியா, மரைன் டிரைவ், பாந்த்ரா பாலம் ஆகியவை பார்த்து ரயில் அன்று இரவு 07.00 மணிக்கு கோவா மட்கான் புறப்படும். அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் கோவாவில் மாண்டவி நதி, காலண்குட் பீச், கதிட்ரல் பீச் ஆகியவற்றை பார்த்து ரயில் அக்டோபர் 6 அன்று மாலையில் 06.30 மணிக்கு மதுரை புறப்படும். 


சுற்றுலா முடிந்து ரயில் அக்டோபர் 7 அன்று இரவு 09.15 மணிக்கு மதுரை கூடல் நகர் வந்து சேரும். இந்த சுற்றுலா தலங்கள் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பும் அதிமுக்கிய சுற்றுலா தலங்களாகும். இந்தச் சுற்றுலாவிற்கு பயணச்சீட்டுகள் www.railtourism.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம். சுற்றுலா பற்றி மேலும் விவரங்களை அறிய 8956500600 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !