மதுரை மத்திய சிறையில் அமைதி கல்வி திட்டம்

Madurai Minutes
0

சிறைத்துறை டிஜிபி திரு அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ் அவர்கள் சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு விதமான சீர்திருத்த பணிகளை சிறை துறையில் மேற்கொண்டு வருகிறார். சிறைவாசிகளுக்கு தொழிற்பயிற்சிகள் யோகா பயிற்சி வகுப்புகள் பல்வேறு விதமான மனவளக்கலை பயிற்சிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்.


தற்பொழுது சிறைவாசிகளின் மனதை ஆற்றுப்படுத்தும் விதமாகவும் அவர்களை அமைதிப்படுத்தி நல்வழிப்படுத்தும் வகையில்  உலக அமைதி பேச்சாளர் திரு பிரேம் ராவத் அவர்களின் குழுவினர் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும் அமைதி கல்வி திட்டம் என்ற பெயரில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.


இந்த பயிற்சி வகுப்பில் அமைதி ,மதிப்பை உணர்தல் ,உள் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்து கொள்ளுதல் ,தன்மானம், தேர்ந்தெடுத்தல், நம்பிக்கை, திருப்தி, ஆகிய தலைப்பின் கீழ் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.


இப்பயிற்சி இன்று முதல் 10 நாட்களுக்கு தினந்தோறும் காலை ஒரு மணி நேரம் வழங்கப்படுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !