JCI மதுரை Dynamic கிளையின் 9 ஆவது பதவியேற்பு விழா

Madurai Minutes
0

JCI மதுரை Dynamic கிளையின் 9 ஆவது பதவியேற்பு விழா நேற்று 22 டிசம்பர் 2023 சிறப்புற நடைபெற்றது.


JCI இந்தியா, மண்டலம் 17 ஐ சார்ந்த கிளை நிறுவனமான JCI மதுரை டைனமிக்கின் 2024 க்கான தலைவர் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நேற்று, வெள்ளிக்கிழமை 22 டிசம்பர் 2023 அன்று மாலை 6 ம‌ணியள‌வி‌ல் மதுரை புரடக்டிவிட்டி கவுன்சில், மஹபூபாளயத்தில் இனிதே நடந்தேறியது.


2024 ஆம் ஆண்டிற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு Jc சண்முகப்பிரியன் அவர்களும், செயலாளராக திரு Jc வினோத் அவர்களும், பொருளாளராக திரு Jc சக்தி தாசன் அவர்களும் மேலும் ஏனைய ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களும்  பிரமாணம் எடுத்து பதவி ஏற்றனர்.


இந்த நன்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக Digitall அமைப்பின் தலைவர் மற்றும் கமலம் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு JK முத்து அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், மண்டலம் 17 இன் மண்டல தலைவர் JCI Sen சுந்தரேஸ்வரன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மண்டல துணை தலைவர் Jc ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.


உடனடி முன்னாள் தலைவர் JFM தீனதயாளன் அவர்கள் 2023 க்கான ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். 


மண்டல துணை தலைவர் Jc ராஜேந்திரன் அவர்களும், மண்டல அலுவலர் JCI Sen Adv சுடலை முத்து அவர்களும், முன்னாள் தலைவர் JFS கணேஷ் அவர்களும், மற்றும் JCI மதுரை ஆனந்தம் கிளையின் பட்டய தலைவர் Jc H பிரசன்னா அவர்களும் புதிய தலைவருக்கும் ஆட்சி மன்ற குழுவிற்கும் வாழ்த்துரை வழங்கினர். 


இந்நிகழ்ச்சியில் தலைவர் பொறுப்பேற்க்கும் Jc சண்முகப்பிரியன் அவர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான திட்டங்களை வெளியிட்டார். பொது நல நோக்குடனும், சமுக மாற்றத்தை ஏற்படுத்தவும் பல திட்டங்கள் துவங்கப்பட்டன.


1. Hygiene Campus for Healthy Young India என்ற திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் சுகாதாரம் ஏற்படுத்தும் திட்டம்

2. Young Entrepreneurs Development என்ற இளம் தொழில் முனைவரை உருவாக்கும் திட்டம்

3. DAAN எனப்படும் உணவு வழங்கும் திட்டம்

4. மதுரைக்கு வருக என்ற முழக்கத்துடன் மதுரையர்கள் இயக்கத்துடன் இணைந்து மதுரையின் சுற்றுலா மேம்பாட்டுக் திட்டம்


ஆகிய திட்டங்கள் வெளியிடப்பட்டன.


இந்த நிகழ்வில் JCI மதுரை Dynamic கிளையின் முன்னாள் தலைவர்களும், உறுப்பினர்களும், பல மண்டல அலுவலர்களும், மற்ற கிளை இயக்க தலைவர்களும் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !