அன்னை பாத்திமா கல்லூரியில் பல் மருத்துவ விழிப்புணர்வு முகாம்

Madurai Minutes
0

மதுரை திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  தாளாளர் எம். எஸ். ஷா மற்றும் பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் கல்லூரியின் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் துறையும் மதுரை ஜாரா பல் மருத்துவமனையும் இணைந்து பல் மருத்துவ விழிப்புணர்வு முகாமை நடத்தியது.


ஜாரா பல் மருத்துவமனை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் அபாஃக் தலைமையில் நான்கு பல் மருத்துவர்கள் மற்றும் 15 உதவியாளர்கள் கலந்து கொண்ட சிறப்பு பல் மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்து கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் உரையாற்றுகையில் ஆரோக்கியமான பற்கள் நமது முழு உடல் ஆரோக்கியத்திற்கும், சரியான முக அமைப்பிற்கும், பேச்சு தெளிவிற்கும் இன்றியமையாதது எனவும் தினசரி காலை மற்றும் இரவு இரண்டு முறை பற்களை துலக்குவதின் மூலம் பற்களின் ஆரோக்கியத்தை பேண இயலும் எனவும் கூறினார்.  


ஜாரா பல் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் அஃபாக் கூறுகையில் தற்போது பல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது எனவும் பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எவ்வாறு என்பது பற்றியும் விளக்கிக் கூறினார். டாக்டர்கள் ஜெயபாரதி,  கார்த்திபன், ரூபி, செல்வா ஆகியோர்  மாணவர்களை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். முன்னதாக ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் துறை மாணவி பிரியா  வரவேற்புரை ஆற்றினார். 


முகாம் ஏற்பாடுகளை ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் துறைத்தலைவர் சௌபியா பானு, பேராசிரியர்கள்  பொன்மயில், சசிகலா ஆகியோர் தலைமையில் மாணவிகள் அர்ச்சனா, தேவநேயா, காளீஸ்வரி, மர்சியா ஆஸ்மி, பிரியா, ஸ்ருதி, சமீரா, கலையரசி, மாணவர்கள் சிம்சன், ஷெரின், ஜெஃப்ரி மோரிஸ், அலெக்ஸ், அபிஷேக் பின்னு, சிஃபான், பிரியதர்ஷன், ஹரி கிருஷ்ணா, அலெக்ஸ் ஆகியோர் செய்தனர். 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயன்பெற்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !