சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரலாறு காணாத கூட்டம்

Madurai Minutes
0

சபரிமலை ஐயப்பன் கோயில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் திருப்பதியை விட அதிக மணி நேரம் காத்து கிடந்து 18 படி ஏறி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். 


இந்நிலையில் மண்டல பூஜை நிறைவு நாளான கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதியும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் ஆங்காங்கே அடைத்து வைக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு உணவு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் சபரிமலையில் சலசலப்பு ஏற்பட்டது.


அங்கு பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருந்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அஜித் குமார் உடைய சிறப்பு பாதுகாப்பு பிரிவு டிஐஜி தாம்சன் ஜோஸ் IPS, எஸ். பி,  ஆனந்த் IPS, கூடுதல் எஸ் பி ராஜேஷ் மற்றும் அவருடைய தனிப்படையினர் எஸ்ஐக்கள் சுனில்குமார் , சணல் குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் பக்தர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை கேட்டனர். தாங்கள் குடிக்க தண்ணீர், உணவு இல்லாமல் தவிப்பதாகவும், கொண்டு வந்த நெய் தேங்காய்களை உடைத்து  சாப்பிட்டதாகவும் தெரிவித்தனர் . 


இதை அடுத்து  கூடுதல்  டிஜிபி அஜித் குமார் உத்தரவின் பேரில் பக்தர்களுக்கு குளுக்கோஸ், தண்ணீர் பாட்டில், லட்டு போன்றவை போலீசார் விநியோகித்தனர். இதை அடுத்து பக்தர்கள் சுமுகமாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு சென்றனர். இந்நிலையில் மீண்டும் நடை திறக்கப்பட்டு மகரஜோதிக்காக பக்தர்கள் அதிக அளவு சபரிமலையில் குவிந்துள்ளனர். ஏற்கனவே பக்தர்கள் பட்ட சிரமம் மீண்டும் ஏற்படக் கூடாது என்பதற்காக கூடுதல் டிஜிபி அஜித் குமார் உத்தரவின் பெயரில் அவருடைய சிறப்பு பாதுகாப்பு பிரிவு டிஐஜி தாம்சன் ஜோஸ்,


எஸ் பி ஆனந்த் தலைமையிலான சிறப்பு பாதுகாப்பு பிரிவு   போலீசார் கூட்டத்தில் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தினமும் குளுக்கோஸ், குடிநீர், லட்டு  வழங்கி பக்தர்களை ஆசுவாசப்படுத்தி வருகின்றனர். சபரிமலை வரலாற்றில் முதல் முறையாக போலீசார் பக்தர்களுக்கு இதுபோன்று உணவு, குடிநீர், குளுக்கோஸ், லட்டு போன்ற பொருள்கள் வழங்குவது முதல் முறையாகும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !