"அன்மாஸ்க் கேன்சர்” என்ற திட்டத்தை தொடங்கும் அப்போலோ கேன்சர் சென்டர்

Madurai Minutes
0

புற்றுநோய்க்கு பிந்தைய வாழ்க்கை பற்றிய ஒரு ஆய்வாக, ‘அன்மாஸ்க் கேன்சர்’ (புற்றுநோய் பற்றிய சரியான தகவல்களை வழங்குவது) என்ற புரட்சிகரமான பரப்புரைத் திட்டத்தை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACCs)பெருமையுடன் அறிமுகம் செய்கிறது. 


புற்றுநோய் பற்றிய உண்மையை மறைவிலிருந்து வெளிக்கொணர்வது, அது தொடர்பான கட்டுகதைகளையும், தவறான கண்ணோட்டங்களையும் மக்கள் மனதிலிருந்து அகற்றுவது மற்றும் சமூகத்திற்குள் புற்றுநோயாளிகள் மீது புரிந்துணர்வை வளர்ப்பது என்பதே இத்திட்டத்தின் நோக்கம். புற்றுநோய் தினம் விரைவில் அனுசரிக்கப்படவிருக்கும் நிலையில், புற்றுநோயை வென்று உயிர்வாழ்பவர்கள் எதிர்கொள்கிற பாகுபாடு, உதாசீனம் போன்ற துரதிர்ஷ்டமான யதார்த்த நிலையை நேருக்குநேராக எதிர்கொள்ள ACC எடுக்கும் ஒரு தைரியமான நடவடிக்கை இது. 


‘அன்மாஸ்க் கேன்சர்’ என்பது, சிறப்பான திறன்களும், தகுதிகளும் இருக்கின்றபோதிலும் அவர்களது முந்தைய புற்றுநோய் வரலாற்றின் காரணமாக நிலவும் ஒருதலைச்சார்பான கண்ணோட்டங்களின் விளைவான சமூக பாகுபாடுகள் / உதாசீனங்களை எதிர்கொள்கிற, புற்றுநோயை வென்று வாழ்பவர்களின் பயணமாகும். பாகுபாட்டையும், உதாசீனத்தையும் எதிர்கொள்ள வேண்டிய அச்சத்தின் காரணமாக தங்களது வாழ்க்கையில் புற்றுநோய் வந்த முக்கியமான அம்சத்தை அவர்கள் மறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் குறித்து இந்த பரப்புரைத் திட்டம் எடுத்துரைக்கிறது. “உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சைப் பராமரிப்பை வழங்குவது என்ற நோக்கத்தையும் கடந்து எமது குறிக்கோளும், செயல்திட்டங்களும் நீள்கின்றன. அவர்களது மருத்துவ வரலாறு எதுவாக இருப்பினும் ஒவ்வொரு தனிநபரின் உரிமைகளையும் மதிக்கும் நாங்கள் புற்றுநோயாளிகளுக்கும் அவைகள் நிச்சயம் கிடைக்க வேண்டுமென்று உறுதியாக நம்புகிறோம். ‘அன்மாஸ்க் கேன்சர்’ என்ற இத்திட்டம் சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோயிலிருந்து மீண்டு வாழ்பவர்களுக்கு ஆதரவளிக்கிற மற்றும் அவர்களை கரம் பிடித்து உயர்த்துகிற ஒரு சமூகத்தை உருவாக்கும் செயற்பணியில் எமது அர்ப்பணிப்புக்கான ஒரு சாட்சியமாக திகழ்கிறது.” என்று அப்போலோ நிறுவனத்தின் மதுரை மண்டல COO  நீலகண்ணன் கூறினார். 


ஏசிசி மதுரையின் மருத்துவ புற்றுநோயியல் மூத்த ஆலோசகர், டாக்டர் தேவானந்த், மதுரை  அப்போலோ புற்றுநோய் மையத்தின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் பாலு மகேந்திரா, ஏசிசி மதுரையின் மருத்துவ புற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் தீனதயாளன் கூறுகையில் “புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர் வாழும் நபர்களுக்கு எதிரான பாகுபாடும், உதாசீனமும் அவர்களது தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தடைகளை உருவாக்குவது நின்றுவிடுவதில்லைளூ அவர்களது மனம் மற்றும் உணர்வு ரீதியிலான நலத்தின் மீதும் குறிப்பிடத்தக்க பாதிப்பை இது ஏற்படுத்துகிறது. இந்த முக்கியமான பிரச்சனை மீது சமூகத்திற்கு எடுத்துக்கூறி உணர்வூட்டுவதற்கான ஒரு முதன்முறை முயற்சியாகவும் அணுகுமுறையாகவும் அன்மாஸ்க் கேன்சர்| திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. 


புற்றுநோய் வெற்றியாளர் ராயப்பன் மற்றும் மாரிமுத்து பேசுகையில், "புற்றுநோயாளிகள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கு எதிரான பாகுபாடு அவர்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையூறு விளைவிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. 'அன்மாஸ்க் கேன்சர்' என்பது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முன்னோடியில்லாத அணுகுமுறையாகும். இந்த முக்கியமான பிரச்சினைக்கு சமூகம் மற்றும் மிகவும் இரக்கமுள்ள உலகத்திற்கு வழி வகுக்கும்."

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !