மதுரையில் டாக்டர் மாதவன் இருதய மையம் "ஹைபிரிட்" நுண்துளை அறுவை சிகிச்சை செய்து சாதனை

Madurai Minutes
0

வழக்கமாக செய்யப்படும் இதய பைபாஸ் அறுவை சிகிச்சையில் நோயாளியின் நடு மார்பு எலும்பை 6- 8 அங்குல நீளம் வெட்டி அறுவை சிகிச்சை செய்வர் இந்த முறையில் நோயாளியின் மார்பில் பெரிய வடு ஏற்படுவதோடு வலி மிகுந்து காணப்படும் சிகிச்சை முடிந்து நோயாளி வீடு திரும்ப 10 நாட்கள் ஆவதோடு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கும் சில மாதங்களாகும். அதோடு காவில் நாளங்களை எடுக்கும் வடுவும் இருக்கும்.


மூன்று விதமான நுண் துளை இருதய அறுவை சிகிச்சை


டாக்டர் மாதவன் இதய மையத்தில் தற்போது 3 விதமான நுண் துளை அறுவை சிகிச்சை முறைகள் செய்யப்படுகின்றன.


ஏழாண்டுகளுக்கு முன்பே மார்புக்கு கீழ் இரண்டு அங்குல நீளத்திற்கு கீறி இதய வால்வை மாற்றும் அறுவை சிகிச்சை முறையை டாக்டர் மாதவன் தலைமையிலான குழு அறிமுகப்படுத்தியது.  


நுண் துளை மூலம் பைபாஸ் சிகிச்சை இது வால்வு மாற்று சிகிச்சையை விட சற்று கடினம், 3வதாக  செய்யப்படுகிற நுண் துளை அறுவை சிகிச்சை முறை கலவை.


பைபாஸ் சிகிச்சை முறையின் சிறப்பையும் ஆஞ்சியோ ப்ளாஸ்டி சிகிச்சை முறையின் சிறப்பையும் கலந்து ஹைபிரிட் நுண் துளை மூலமாக சுத்த ரத்தக்குழாயை இருதயத்துடைய முக்கியமான இரத்தக்குழாயான டாட்க்கு (இதயத்தின் முன் பக்க ரத்தக் குழாய்) பைபாஸ் செய்வதாகும்.  இதை தொடர்ந்து தொடை மூலமாகவோ கை மூலமாகவோ மற்ற இரத்தக்குழாய்க்கு ஸ்டென்டிங் செய்வதே/ஆஞ்சியோ ப்ளாஸ்டி) இந்த ஹைபிரிட் சிகிச்சை என்பது.  இதன் மூலம் இந்த 2  சிகிச்சை முறைகளின் பலனை நோயாளிகள் பெறுவார்கள். 


இது அனுபவம் மிகுந்த சில மருத்துவர்களால் மட்டுமே சாத்தியம் இந்திய அளவில் ஒரு சில தலை சிறந்த மருத்துவமனைகளிலேயே இத்தகைய சிறப்பானதொரு கலவை முறை சிகிச்சையை தென் தமிழகத்திலேயே முதன் முறையாக அறிமுகம் செய்து தொடர்ந்து ஒரு மாத காலத்திற்குள் 3  நோயாளிகளுக்கு மிகக் குறைந்த நேரத்தில் வெற்றிகரமாக சிகிச்சையளித்துள்ளோம், வீடு திரும்பிய நோயாளிகள் மிக குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்கு திரும்ப உதவியுள்ளோம் என்பதே எங்களின் பெருமிதம்.


இதய நுண் துளை சிகிச்சை முறை, நோயாளியின் உடலில் மிகச் சிறிய வடு, வலிக்குறைவு, விரைவில் குணமடைதல் மிச்சிறந்த பலனை தருவது என்பது ஒரு மைல் கல் சாதனையாக கருதப்படுகிறது.


தென் தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த மாபெரும் சாதனையை மருத்துவர் டாக்டர் மாதவன் தலைமையில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோப் மற்றும் மைய மருத்துவர்கள் குழுவினர் வெற்றிகரமாக செய்துள்ளார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !