குரு மருத்துவமனையில் மகளிர் தின கொண்டாட்டம்

Madurai Minutes
0

உலக மகளிர் தினம் கொண்டாட்டம் மார்ச் 10 அன்று குரு மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.


Dr. S. G. பாலமுருகன் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் வரவேற்புரை வழங்கினார்.


Dr. B. கல்பனா செயற்கை கருத்தரிப்பு நிபுணர், அகில இந்திய செயற்கை கருத்தரிப்பு கமிட்டியின் தலைவரானது தொடர்பாக வாழ்த்துரை, Dr. N. ஜெகதீசன், தலைவர், வர்த்தக சபை.  Dr. ரேவதி கைலைராஜன், முன்னாள் டீன் மதுரை மருத்துவக் கல்லூரி, மற்றும் Dr. செந்திரு ராமச்சந்திரன், மகப்பேறு மருத்துவர் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்.


Dr. B. கல்பனா 25 வருட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். குரு மருத்துவமனையில் பல்லாயிரக்கணக்கான செயற்கை கருத்தரிப்பு குழந்தைகள் பிறந்ததை நினைவுகூர்ந்தார்.


மற்றும் தென்னிந்தியாவில் முதலாவதாக தேசிய அகில இந்திய குழந்தையின்மை COMMITTE தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். குழந்தையின்மை சிகிச்சையில் மருத்துவரின் பொறுப்பை எடுத்துரைக்கும் விதமாக தாய்மை அவள் உரிமை எனும் SIGNATURE CAMPAIGN ஆரம்பிக்கப்பட்டதை கூறினார். அதில் பலர் கையெழுத்திட்டத்தை கூறினார். தாய்மை சமுதாயத்தின் கட்டாயமாக்கப்பட்டது பெண் மனசோர்வுக்கு ஆளாகும் நிலை உருவாகும் என்பதை கூறினார். இதற்கு குரல் கொடுக்க விரும்புவர் #her_pregnancy _her_right  என்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய கேட்டுக்கொண்டார்,மற்றும் குரு மருத்துவமனை கடந்த 20 வருடங்களில் பல்லாயிரக்கணக்கான  LAP SURGERY , பெண்களுக்கான புற்றுநோயை குணப்படுத்தும் சேவை செய்வதாக கூறினார் .பெண்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசிகளும் மார்பக புற்றுநோய் மற்றும் பெண்களுக்குக்கான கர்பப்பை புற்றுநோய் கண்டறியவும் பரிசோதனை சலுகை கட்டணத்தில் இம்மாதம் முழுவதும் செய்யப்படுவதாக கூறினார் .குழந்தையின்மைக்கான விந்தணு பரிசோதனை, ULTRASOUND, COUNSELLING இலவசமாக செய்யப்படுவதாகவும் IVF, IUI சிகிச்சைகள் சலுகை கட்டணத்தில் செய்யப்படுவதாக கூறினார்.


இதன்பின் தாய்மை அடைவது இனிமையானதா? கட்டாயமாக்கப்பட்டதா? எனும் தலைப்பில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடந்தது இதில் 750-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். பல மருத்துவர்கள் கௌரவிக்கப்பட்டனர். டாக்டர் கல்பனா நன்றி உரைத்து விழா முடிவடைந்தது .


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !