பிரீமியம் கார்களுக்கான புதிய பிரிட்ஜ்ஸ்டோன் ‘டுரான்ஸா 6ஐ’ டயர்கள்

Madurai Minutes
0

பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா (Bridgestone India) நிறுவனம் அனைத்து வகையான கார்களுக்குப் பொருந்தும் வகையிலான பிரிட்ஜ்ஸ்டோன் டுரான்ஸியா 6ஐ (Bridgestone TURANZA 6i) என்ற பெயரிலான டயரை அறிமுகம் செய்துள்ளது. கார்களுக்கான ரேடியல் டயர் அறிமுகம் மூலம் தனது விற்பனை சந்தையை விரிவுபடுத்தியுள்ளது. இந்திய சாலைகளுக்கென பிரத்யேகமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. சொகுசான பயணத்தையும், மேம்பட்ட ஓட்டும் அனுபவத்தையும் இது அளிக்கும். எரிபொருள் சிக்கனம் மற்றும் நீடித்து உழைக்கும் வகையில் பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனத்தால் பிரீமியம் தயாரிப்பாக இது அறிமுகமாகியுள்ளது.


பிரிட்ஜ்ஸ்டோன் டுரான்ஸியா 6ஐ டயர்கள், 14 அங்குலம் முதல் 20 அங்குல வரையிலான - 36 ஸ்டாக் கீப்பிங் யூனிட்ஸ் (Stock Keeping Units - SKU) அளவுகளில் கிடைக்கும். பிரீமியம் வாகனங்களான எஸ்.யு.வி., செடான், ஹாட்ச்பேக் மற்றும் சி.யு.வி.க்களுக்கு ஏற்ற வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரீமியம் டயர் அறிமுகம் மூலம், அரசின் ‘மேக் இன் இந்தியா’ (Make in India) முன்னெடுப்பில் தங்கள் நிறுவனத்துக்குள்ள பொறுப்புணர்வை பிரிட்ஜ்ஸ்டோன் நிறைவேற்றியுள்ளது.


இந்த டயர் அறிமுகம் மூலம் பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம் சர்வதேச காப்புரிமையான என்லைடென் தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்கள் அளிக்கும் பணத்திற்கு உரிய பலனைப் பெறும் விதமாகவும், அதிகரித்துவரும் சந்தை வாய்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலும் அறிமுகம் செய்துள்ளது. இந்திய நுகர்வோரின் அடிப்படை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதோடு மிகச் சிறப்பான செயல்பாடு கொண்டதாக தங்கள் தயாரிப்பு அமையும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. டுரான்ஸியா 6ஐ டயர்களில் என்லைடென் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் சொகுசான பயண அனுபவத்தை அளிக்கும்.  சீரான இயக்கம் மூலம் வாகனத்தின் எரிபொருளும் சிக்கனமாகும். அத்துடன் இது நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது.  இவற்றின் காரணமாக டுரான்ஸியா 6ஐ டயர்கள் மிகவும் நம்பகமான சாலையின் இருக்கை என்று வாடிக்கையாளர்களால் உணரப்படும்.


டுரான்ஸியா 6ஐ பொதுவான கார்கள் மற்றும் பேட்டரி கார்களுக்கும் ஏற்றது. எரிபொருள் சிக்கனமானது, நீடித்து உழைக்கக் கூடியது.


இந்த அறிமுகம் குறித்து பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. ஹிரோஷி யோஷிஸேன் (Mr. Hiroshi Yoshizane) கூறுகையில், “டுரான்ஸியா 6ஐ டயர் அறிமுகம் வளர்ந்து வரும் இந்திய சந்தையில் எங்களது சிறப்பான தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் தயாரிப்பாக அறிமுகமாகியுள்ளது. எங்களது உத்திசார் முதலீடு அடிப்படையில் முன்னேறிய தொழில்நுட்பம் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனத்தின் காப்புரிமை தொழில்நுட்பமான என்லைடென் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டயர் மேம்பட்ட ஓட்டும் அனுபவத்தை அளிக்கும். இத்தகைய அனுபவம்தான் தற்போது சந்தையில் மிக அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர இந்திய நுகர்வோர் எதிர்பார்க்கும் அடிப்படை செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. நீடித்து உழைக்கக் கூடியது. எரிபொருள் சிக்கனத்துக்கு வழிவகுக்கிறது. எங்களது வாடிக்கையாளர்களுக்காக டுரான்ஸியா 6ஐ டயர்களை அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்தார்.


“டயர் உற்பத்தியில் சர்வதேச அளவில் முன்னேறிய தொழில்நுட்பம் கொண்ட நிறுவனமாக பிரிட்ஜ்ஸ்டோன் திகழ்கிறது. இந்தியச் சந்தையில் புதிய தயாரிப்புகள் மூலம் வாடிக்கையாளர்களிடம் பிரபலமாகி வருகிறது. உயரிய தரத்திலான சிறப்பான தயாரிப்பை அளித்துள்ளதன் மூலம் எங்கள் நிறுவனத்துக்குள்ள பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளோம். இது பிரீமியம் கார் சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலானது. டுரான்ஸியா 6ஐ டயர்கள் இந்தியா முழுவதும் உள்ள பிரிட்ஸ்ஜோன் விற்பனையகங்களில் கிடைக்கும்” என்று பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி திரு. ராஜர்ஷி மொயித்ரா (Mr. Rajarshi Moitra) தெரிவித்தார்.   


பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம் தொடர்ந்து டயர் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி மேம்பட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்து இந்திய நுகர்வோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது. இப்புதிய அறிமுகம் மூலம் பிரீமியம் கார்களுக்கான டயர் சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு தொடர்ந்து முன்னிலை வகிக்கவும் இது உதவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !