மதுரை மத்திய சிறையில் சிறை காவலர்களுக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு

Madurai Minutes
0

இந்தியா முழுவதும் புதிய முப்பெரும் சட்டங்கள் 1.7. 2024  முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் மதுரை மத்திய சிறை சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு இந்த புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கும் விதமாக சட்ட விளக்கப் பயிற்சி வகுப்பு மதுரை மத்திய சிறையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் மதுரை சரக சிறை துறை DIG திரு. பழனி அவர்கள் தலைமையில் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு. சதீஷ்குமார் அவர்கள்  முன்னிலையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. சாமிதுரை அவர்கள் மற்றும்  திரு. சிவக்குமார்  சட்ட உதவி தலைமை வழக்கறிஞர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு . மற்றும்  திரு. சாமி சந்திரசேகரன். சட்ட ஆலோசகர் சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகியோர் இணைந்து சிறை பணியாளர்களுக்கு மூன்று நாட்கள் 


1. பாரதிய நீதிச் சட்டம், 2023

(The Bharatiya Nyaya sanhita, 2023) 


2. பாரதிய சாட்சியச் சட்டம், 2023

(The Bharatiya Sakshya Adhiniyam, 2023) 


3. பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம், 2023

(The Bharatiya Nagarik Suraskha Sanhita, 2023) 


குறித்த சட்டப் பயிற்சி அளிக்க உள்ளனர். இப்பயிற்சியில் சுமார் 300 சிறை பணியாளர்கள் கலந்து கொண்டு சட்டப் பயிற்சி பெற உள்ளனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !