24 மணி நேரம் தொடர்ந்து பாட்டுப்பாடி மதுரை காமாராசர் பல்கலை. பேராசிரியர் சாதனை

Madurai Minutes
0

 

மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்கக தமிழ்த் துறை தலைவர் பரமேஸ்வரன் 24 மணிநேரம் தொடர்ந்து குறிஞ்சி மான் செய்யுள் நாடக காப்பியம் எழுதி பாடி உலக சாதனை நிகழ்த்தியதற்காக ஆல் இந்தியா புக்ஸ் ஆப் ரிக்கார்ட்ஸ் அகத்தியர் தமிழ் சங்கம் அதற்கான சான்று தரும் விழா நேற்று மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. 

அந்நிகழ்ச்சியில் துணைவேந்தர் குமார்  உலக சாதனை சான்றிதழ் வழங்கினார்.
முத்துப்பாண்டி இயக்குநர் (பொ)  கயிலைமணி அப்பாக்குட்டி வேதரத்தினம், வேதரண்யம் கணேஷ் குமார் வேலுப்பிள்ளை, கதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாகத் தலைவர் சுவிட்சர்லாந்து, தமிழ் துறை தலைவர் பெர்னாட்ஷா, ச.வெ.கல்லூரி ஓய்வு, தியாகராஜா.பாஸ்கரன் தொழில் அதிபர் ஜெர்மனி  ஆல் இந்திய புக் ஆப் ரிக்கார்ட்ஸ் பாண்டிச்சேரி  ராஜேஷ் குமார்  பேராசிரியர்  இரகுபதி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஓய்வு  அகத்தியர் தமிழ் சங்கம் மற்றும் அகத்தியர் அறக்கட்டளை தலைவர் 
 அனிதா புலவர், பத்ரிநாராயணன் பத்ரி அறக்கட்டளை சுவாமிநாதன் திருவாரூர் சிவராஜன்,பிரபு கலந்து கொண்டு வாழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து அயல்மொழிக்கு நிகரான தமிழ்ச் சொற்களை உருவாக்கவும் அதை உலக அளவில் கொண்டு செல்லவும் சுவிட்சர்லாந்து கணேஷ் குமார் வேலுப்பிள்ளை, பாஸ்கரன் ஜெர்மனி கயிலைமணி அப்பாக்குட்டி வேதாரண்யம் பேராசிரியர் பெர்னாட்ஷா, ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் ரகுபதி  ஆகியோருடன் துணைவேந்தர் குமார்
ஆலோசனை நிகழ்த்தினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !