3 மணி நேரம் தொடர் சிலம்பம் ஆடி பல்லோட்டி பள்ளி மாணவன் சாதனை

Madurai Minutes
0

 

மதுரை

கின்னஸ் ஸ்டார்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறு வகையில், தமிழர்களின் வீரக்கலையான சிலம்பக்கலையின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் உலக சாதனை நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. கின்னஸ் ஸ்டார்ஸ் உலக புத்தகத்தின் இயக்குநர்கள் கலிஸ்த்ராஜ், டேனியல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

ஆசான்கள் ராஜ மகா குரு ராமகிருஷ்ணன், சேதுலட்சுமி, செல்வராஜ், ஜவகர்பாண்டி, பரத் வாஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.இதில் மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள பல்லோட்டி உயர் நிலை பள்ளி மாணவர் யுவன் சந்தோஷ் தொடர்ந்து 3மணி நேரம் சிலம்பம் சுற்றி கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்தார்.அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.போட்டிக்கான ஏற்பாடுகளை விராட்டிபத்து ஸ்ரீமாருதி சிலம்ப பள்ளியினர் செய்திருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !