அப்போலோ மருத்துவமனையில் குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி

Madurai Minutes
0

மதுரை குழந்தைகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், அவர்களின் கல்வி மற்றும் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வைப் பரப்பும் விதமாக நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த குழந்தைகள் தினத்தில், ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகுந்த நம்பிக்கைக்குரிய மருத்துவ சேவை குழுமமான அப்போலோ, குழந்தைகளுக்கான மருத்துவ உரிமை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் உள்ள அப்போலோ குழுமத்தின் சில மருத்துவமனைகளில் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது.


இந்த நிகழ்ச்சியில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை, அப்போலோ குடும்பத்தின் உறுப்பினர்களாக ஏற்று, சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்ட பகுதிக்கு அவர்களை வரவழைத்து மகிழ்வித்தோம். அத்துடன் குழந்தைகள் மருத்துவர்கள், செவிலியர்கள் போல் உடையணிந்து மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களையும், உள் நோயாளிகளையும் சந்தித்து நலம் பெற வாழ்த்து தெரிவித்து புது அனுபவத்தை பெற்றனர்.


விளையாட்டுகளில் குழந்தைகளை பங்கு பெறச் செய்வது மட்டுமல்லாமல் சுகாதாரம் குறித்த தகவல்களும் கற்றுக் கொடுக்கப்பட்டது. கேள்வி கேட்டு பதில் அளிக்கும் வகையில் உறுப்புகளை தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் இதயம், நுரையீரல், எலும்புகள், தசைகள், கண்கள், மூக்கு மற்றும் மூளையின் செயல்பாடுகள் குழந்தைகளுக்கு எடுத்து சொல்லப்பட்டது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தி பின்னர் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் ஆரோக்கிய சிற்றுண்டி வழங்கப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


நமது எதிர்காலத்தை நமது குழந்தைகளே நிர்ணயிக்கின்றனர். அந்த குழந்தைகளை நாம் பாதுகாத்து அவர்களின் ஆரோக்கியத்தை காப்பது தான் நமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை நடத்தும் இந்த நிகழ்ச்சி எங்கள் மருத்துவமனையின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக நடத்தப்படுகிறது. கள்ளம் கபடமில்லா குழந்தைகளின் இயல்பான மகிழ்ச்சியும் சிரிப்பும் தான் நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு. உணவு உடை உறைவிடம் மற்றும் கல்வி ஆகிய அடிப்படை உரிமைகளுடன், சிறந்த சுகாதார வசதிகளும் கிடைக்க வேண்டியது அவசியம் என்று மதுரை அப்போலோ மருத்துவமனையில் தலைமை செயல்பாட்டு அதிகாரி நீலக்கண்ணன் தெரிவித்தார்.


அப்போலோ மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் செந்தில்குமார், குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் விஜய் ஆனந்த், மூத்த குழந்தைகள் நல மருத்துவர் முருகன் ஜெயராமன், குழந்தைகள் இருதய சிகிச்சை நிபுணர் எல் கே செந்தில்குமார் ஆகியோர் குழந்தைகள் தங்களின் உடல் நலத்தையும், குடும்பத்தினரில் உடல் நலத்தையும் பாதுகாத்திட ஊக்கப்படுத்தும் புதிய முயற்சியாக அவர்களின் ஆடைகளில் ஃபியூச்சர் ஹீலர் என்ற வாசகம் பதித்த ஸ்டிக்கர் ஒட்டி ஊக்கப்படுத்தினர். மேலும் இந்த குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சியின் போது அப்போலோ மருத்துவமனை டாக்டர் பிரவீண் ராஜன், JDMS, மார்க்கெட்டிங் பிரிவு பொதுமேலாளர் மணிகண்டன், நிர்வாக பொதுமேலாளர் டாக்டர் நிகில் திவாரி ஆகியோர் குழந்தைகள் தின நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !