மீன்வளர்ப்பின் மூலம் சுய வேலை வாய்ப்பை உருவாக்கலாம்

Madurai Minutes
0

 

உள்நாட்டு மீன்உற்பத்தி அளவை உயர்வு செய்து புரதம் நிறைந்த மீன்உணவை சந்தைப்படுத்தவும், மீன்வளர்ப்பின் மூலம் சுய வேலை வாய்ப்பை உருவாக்கவும், மீன்வளர்ப்போர் கூடுதல் இலாபம் பெறவும், மீன்வளர்ப்பை மேற்கொள்ள முன்வரும் விவசாயிகள் கூடுதல் வருவாய் வாய்ப்பைப் பெறவும் மற்றும் மீனவர்கள் மீன்பிடிப்பின் மூலம் நிலையான நீடித்த வருவாய் வாய்ப்பைப் பெறவும் உறுதி செய்யும் நடவடிக்கையாக, நீர்ப்பாசனக் கண்மாய்களில் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த தீவிர உள்நாட்டு மீன்வளர்ப்புத் திட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. 

இத்திட்டம் செயலாக்கத்தில் உள்ள கண்மாய்களில் மீன்வளர்த்துப் பயன்பெறும் உரிமைக்கான குத்தகை வரும் 14.12.2022-அன்று மூடி முத்திரையிட்ட பொது ஏலம் மூலம் மறு குத்தகைக்கு விடப்படவுள்ளது. விருப்பமுள்ளோர் விண்ணப்பங்களை உரிய கட்டணத்தை செலுத்தி 29.11.2022-ஆம் நாள் முதல் பெற்றுக் கொள்ளலாம். 

மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளோர் மீன்பாசி உரிமையை குத்தகைக்குப் பெறுவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விண்ணப்பம் பெற பேச்சியம்மன் படித்துறை, சிம்மக்கல், மதுரை என்ற முகவரியில் இயங்கிவரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்.0452-2347200-க்கு தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !