இல்லத்தரசிகளின் கதைகளைக் கொண்ட மாரி கோல்டு புதிய பாக்கெட் அறிமுகம்

Madurai Minutes
0



மகளிர் தொழில்முனைவோர் தினத்தையொட்டி, பிரிட்டானியா மாரி கோல்டு நிறுவனம், மாநிலம் முழுவதும் உள்ள ஐந்து மகளிர் தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் அவர்களின் தொழில்களை வளர்ப்பதற்கு அதிக முதலீட்டை பெறுவதற்காக, திரள்நிதி வழங்கும் முயற்சியை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது. தொழில்முனைவோராக மாறிய இல்லத்தரசிகளின் உத்வேகக் கதைகளைக் கொண்ட புதிய பேக்குகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மகளிர் தொழில்முனைவோருக்கு தங்கள் தொடக்கங்களை விரிவுபடுத்துவதற்கு திரள்நிதியை ஆதாரமாகக் கொண்டஒரு தளத்தை வழங்கும். குழு நிதிஉதவி முன்முயற்சியில் பங்கேற்ற மாரி கோல்டு பாக்கெட்டை வாங்கி பேக்கில் இருக்கும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து வலைத்தளத்திற்கு செல்லலாம். பின் 5 தொழில்முனைவோரின் கதையை படித்து எந்தக் கதைக்கு நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து பங்களிப்பு ஐகானைக் கிளிக் செய்யலாம்.


பிரிட்டானியா மாரி கோல்டு மைஸ்டார்டப் முன்முயற்சியானது 2019 ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள இல்லத்தரசிகள் அதிகமாக மேலும் பலவற்றைச் செய்ய உதவும் வகையில் அமைக்கப்பட்டது, மேலும் இதுவரை 30 இல்லத்தரசிகள் தங்கள் தொழில் முனைவோர் பயணத்தை முதல் முறை தொடங்க நிதியுதவி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 9 லட்சம் இல்லத்தரசிகள் இந்த பிரிட்டானியா மாரி கோல்டு மை ஸ்டார்ட்அப் முயற்சியில் பங்கேற்றுள்ளனர்.இந்த மகளிர் தொழில்முனைவோரின் கதைகள் மூலம், பிரிட்டானியா இன்னும் அதிகளவில் இல்லத்தரசிகள் தங்கள் தொழில் முனைவோர் பயணங்களைத் தொடங்க ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. திரள்நிதி வழங்கும் முன்முயற்சியின் பின்னணியில் மகளிர் தொழில்முனைவோர் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக, பிராண்ட் தனது பேக்குகளின் வரம்பை மேம்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.


இந்த முயற்சியின் பின்னணியில் உள்ள காரணத்தைப் பகிர்ந்த, பிரிட்டானியாவின் சிஎம்ஓ அமித் தோஷி, கூறுகையில், ‘’இந்தியாவில் தொழில்முனைவோருக்கான முதலீட்டை திரட்ட உதவும் ஒரு வழியாக திரள்நிதி வழங்குவது உருவாகி வருகிறது, மேலும் மாரி கோல்டு மகளிர் தொழில்முனைவோர் துறையில் ஒரு உந்துகோலாக இருப்பதால் தமிழகத்தில் முதல் முறையாக இந்த வாய்ப்பை அறிமுகப்படுத்துகிறது. குழு நிதிஉதவி என்பது கதைசொல்லல், தகவல் தொடர்பு, தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் நடத்தை ஆகிய அனைத்தையும் பற்றியது. தமிழக மக்கள் ஒன்று திரண்டு இந்த முயற்சி வெற்றியடைய செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தமிகத்தில் அறிமுகத்திற்கு பின், இதை ஒரு தேசிய முன்முயற்சியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்”எனத் தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !