சபரிமலையில் 10 லட்சம் பேருக்கு அன்னதானம் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் வழங்கினர்

Madurai Minutes
0

மதுரை 

அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் மண்டல காலத்தில் 

சபரிமலையில் 10 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 27 வரையிலான மண்டல காலத்தில் மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மகரவிளக்கு கால பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி மாலை நடைதிறக்கப்படுகிறது. அன்று முதல் ஜனவரி 19 வரை காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு தொடர்ச்சியாக அன்னதானம் வழங்க சிற்பபு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு ஏற்பட்ட பக்தர்களை உடனடி மருத்துவ சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனை, பம்பா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல 628 முறை ஸ்டெச்சர் சர்வீஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. அன்னதானம், மூலிகை குடிநீர் புண்ணிய பூங்காவனம் . மற்றும் பவித்ரா சபரிமலை சேவைகளில் 1064 அகில பாரத ஐயப்ப சேவா சங்க தொண்டர்கள் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம்,ஆர்.பி..உதயகுமார் கேரளா காவல்துறை உயர் அதிகாரிகள் தேவஸ்சம் போர்டு, விஜிலன்ஸ் உயர் அதிகாரிகள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.

மகரவிளக்கு காலத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான உணவு தண்ணீர் மருத்துவ உதவி, ஸ்டெச்சர் சர்வீஸ் சேவைகளை வழங்க சிறப்பு ஏற்பாடுகளை மத்திய பொதுச்செயலாளர் கோவிந்தபத்மன், மத்திய, மாநில நிர்வாகிகள் மு.விஸ்வநாதன் க.அய்யப்பன் கிருஷ்ணமூர்த்தி சன்னிதான முகாம் அலுவலர் பாலகணேஷ் ஆகியோர் விரிவான ஏற்பாடுகளை செய்தனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !