தேசிய அளவிலான சிலம்ப போட்டி: சாதித்த ஸ்ரீ மாருதி சிலம்ப பள்ளி மாணவர்கள்

Madurai Minutes
0

 

மதுரை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. போட்டியை நெடுஞ்செழியன், மயில்வாகனம், சிவக்குமார், விஜயசேகரன், டி.எம்.ஏ. இன்டர்நேஷனல் சிலம்பம் பவுண்டேஷன் மாநில நிர்வாக தலைவர் முருக பாண்டியன், மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிலம்ப விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் நாகமலை புதுக்கோட்டை ஸ்ரீமாருதி சிலம்ப பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற பல்லோட்டி பள்ளி மாணவன் யுவன் சந்தோஷ் தங்கப்பதக்கம் வென்றார். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களை ஆசான் மகா குரு ராமகிருஷ்ணன், ஆசான் சேது லட்சுமி, மாஸ்டர் செல்வராஜ் பயிற்சியாளர், பரத்வாஜ் ஆகியோர் பாராட்டினர்.Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !