மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்து முன்னணியில் ரமேஷ் தலைமையில் ஆயிரம் பேர் இணையும் நிகழ்ச்சி. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்புரை

Madurai Minutes
0


மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராமங்களில் இருந்து இந்து முன்னணியில் ஆயிரம் பேர் இணையம் நிகழ்ச்சி ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் சிறப்புரை நிகழ்த்தி செய்தியாளர்களிடம் கூறும் போது

 வடிவேலுவின் சினிமா படத்தில் ஒரு கிணத்தை காணவில்லை என்று சொல்வார்கள்

 அது போல் இன்று கோவிலை காணவில்லை என்று சொல்லும் நிலை உள்ளது

  இந்த லட்சணத்தில் தான் உள்ளது திராவிட மாடல் ஆட்சி. என்றும்

 இந்து முன்னணி ஒரு அரசியல் கட்சி அல்ல தேர்தலில் போட்டியிடாது எல்லா கட்சிகளிலும் இருக்கக்கூடிய இந்துக்களை இந்துக்கள் என்று சொல்ல வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக.மட்டுமே

 கடந்த 42 ஆண்டுகளாக வேலை செய்து கொண்டிருக்கிறோம்

  சோழவந்தான் நகரில் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்டவர்கள் இந்து முன்னணியில் இணைந்துள்ளனர் தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் நகரங்களிலும் இணைந்து வருகின்றனர்.

  கோவில் சொத்துக்கள் எங்கெல்லாம் இருக்கிறது என்றும்.எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கிறது என்ற விவரத்தையும்.தருகிறோம் எங்களைக் கூப்பிட்டு கோவில் சொத்துக்களை மீட்க.நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறோம் ஆனால் அமைச்சர் எங்களை கூப்பிட மறுக்கிறார்.

 .கோவில் வருமானத்தை கோவிலுக்கே செலவு செய்ய சொல்லி வலியுறுத்தி வருகிறோம் அது மக்கள் எழுச்சி மூலம் நிறைவேறும்

 பொன் மாணிக்கவே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர் அதிக சிலைகளை கண்டுபிடித்துள்ளார் அவரை இந்து முன்னணி பாராட்டுகிறது

  எங்களை பொறுத்தவரை இந்துக்களின் கோரிக்கை நிறைவேற்றுவது குறித்து.தேர்தல் வாக்குறுதியில்.எந்த கட்சி சேர்க்கிறதோ அந்த கட்சியை நாங்கள் ஆதரிப்போம்

 இவ்வாறு பேசினார்

 இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் சோழவந்தான் ரமேஷ் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !