மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில்.உலக நன்மைக்காக ஐயப்ப பக்தர்களின் சிறப்பு பாதபூஜை நடைபெற்றது

Madurai Minutes
0

 

 


 மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து வருகின்றனர்

 இவர்கள் சோழவந்தான் மற்றும் தென்கரையில் உள்ள ஐயப்பன் கோவில் வந்து தினசரி பஜனை மற்றும் பூஜைகளில் கலந்து கொண்டு இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.

 இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து.விக்கிரமங்கலத்தில் ஐயப்பன் கோவில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வந்தனர். இதற்காக இங்கு உள்ள மாரியம்மன் கோவில் அருகில் உள்ள காலி இடத்தில் மேடை மற்றும் அலங்கார பந்தல் அமைத்து அங்கு ஐயப்பன் மற்றும் 18 படி படத்தை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

  உலக நன்மைக்காக 100க்கும் மேற்பட்ட கன்னிசாமி ஐயப்ப பக்தர்கள் இணைந்து கன்னி பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும். நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்

 இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கலியுகநாதன், ஒன்றிய தலைவர் கவிதா ராஜா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வி செல்வம், ஊராட்சி செயலாளர் பால்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


 இதனைத் தொடர்ந்து உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது கன்னி சாமிகள் அனைவரும் குருநாதர்களுக்கு பாத பூஜை செய்தனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !