கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் ஆனந்தப் பொங்கல் விழா

Madurai Minutes
0


 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாகருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் ஆனந்தப் பொங்கல் விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது முதல்வர்  

காட்வீன் ரூபஸ் அனைவரையும் வரவேற்றார்.அதிபர் ஜான் பிரகாசம் ஆசியுரை வழங்கினார் . செயலர் கில்பர்ட் கமிலஸ் பொங்கல் விழாவை துவக்கி வைத்துப் பேசினார் . இதனைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்களும் , அலுவலகப் பணியாளர்களும் , மாணவர்களும் தமிழ் மரபு மாறாமல் பொங்கல் சீர் வரிசையாக மண்பானை , கரும்பு , மஞ்சள் , பச்சரிசி , வெள்ளம் ஆகியவற்றோடு தமிழர் கலைகலான கரகாட்டம் , ஒயிலாட்டம் சிலம்பாட்டம் உள்ளிட்டவைகளுடன் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழக பாரம்பரிய பொங்கல் விழாவின் சிறப்பு நிழச்சியாக கோலப்போட்டி , பானை உடைத்தல் போட்டி . இளவெட்டுக் கல் தூக்குதல் , கிறு கிறு குறு குறு போட்டி , பலூன் உடைத்தல் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் , அலுவலர்கள் மற்றும் மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது . இவ்விழாவில் அனைத்து துறைத் தலைவர்கள் , கல்லூரி நிர்வாகிகள் , பேராசிரியர்கள் , அலுவலக பணியாளர்கள் மற்றும் கலந்துகொண்டனர் . இவ்விழா மாணவ , மாணவிகள் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை ரேவதி நன்றியுரை கூறினார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !