தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களுக்கு 8 நாட்கள் பயணத்தின்

Madurai Minutes
0


மதுரை மாவட்டம்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத்திட்டத்தின் கீழ் 

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களுக்கு 8 நாட்கள் பயணத்தின் 

ஒரு பகுதியாக மதுரை திருமலை நாயக்கர் மகாலை 

சுற்றுலா பயணிகள்  பார்வையிட்டார்கள்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களுக்கு 8 நாட்கள் பயணத்தின் ஒரு பகுதியாக மதுரை திருமலை நாயக்கர் மகாலை இன்று (23.02.2023) சுற்றுலா பயணிகள்  பார்வையிட்டார்கள்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு–ஒகேனக்கல், மைசூர்-பெங்களுர், குற்றாலம் மற்றும் மூணார் என மூன்று நாட்கள் செல்லும் சுற்றுலா பயண திட்டங்களும், சென்னை-மாமல்லபுரம்,  காஞ்சிபுரம்- மாமல்லபுரம், திருப்பதி, திருவண்ணாமலை, ஶ்ரீபுரம் தங்க கோவில், புதுச்சேரி என ஒரு நாள் சுற்றுலா பயண திட்டங்களும்.  எட்டு நாட்கள் பயணம் செய்யும் தமிழ்நாடு சுற்றுலா, கோவா-மந்த்ராலயம் சுற்றுலா பயண திட்டங்களும். 14 நாட்கள் பயணம் செய்யும் தென்னிந்திய சுற்றுலா பயண திட்டங்களும், யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான பண்பாட்டு சின்னங்களை பார்வையிடும் சுற்றுலா பயண திட்டம்  என பல்வேறு வகையான சுற்றுலா பயண திட்டங்கள் பொது  மக்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பயண திட்டங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் இயங்கி வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளில் தங்குவதற்கான அறை வசதியும், உணவு வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கி பயண திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சேர்ந்தார் போல் 10க்கும் மேற்பட்ட இருக்கைகளை பதிவு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டண தள்ளுபடி சலுகையும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், போர் விதவைகள் ஆகியோருக்கு சிறப்பு கட்டண தள்ளுபடி சலுகைகளும் வழங்கப்படுகின்றன. 

சுற்றுலா பயண திட்டங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் குளிர்சாதன வசதியுடன் கூடிய வால்வோ சொகுசு பேருந்துகள், உயர்தர சொகுசு பேருந்துகள், சாதாரண சொகுசு பேருந்துகள், 18 இருக்கைகளுடன் கூடிய சிறிய ரக சொகுசு பேருந்துகள் என மொத்தம் 14 சொகுசு பேருந்துகளை கொண்டுள்ளது.

பாண்டிச்சேரி, பிச்சாவரம், சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோயில், நாகூர், வேளாங்கண்ணி, தஞ்சாவூர், ராமேஸ்வரம், சுசீந்தரம், கன்னியாகுமரி, மதுரை, கொடைக்கானல், திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் 8 நாட்கள் உணவுடன், தங்கும் வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய பயணத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30  சுற்றுலா பயணிகள் (18.02.2023) காலை சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலா வளாகத்தில் இருந்து பயணத்தை தொடங்கினார்கள். 

பாண்டிச்சேரியில் சுற்றுலா தலங்களை பார்வையிட்ட பின்னர் கடலூர் மாவட்டம் பிச்சாவரம் அலையாத்திக் காட்டில் படகு சவாரி மேற்கொண்டார்கள். சுற்றுலா பயணத்தின் போது சுற்றுலா வழிகாட்டி அனைத்து சுற்றுலாத் தலங்களின் சிறப்புகள்  குறித்து எளிய முறையில்  எடுத்துரைப்பதுடன், அவர்கள் அனைத்து சுற்றுலாத்தலங்களையும் குறித்த நேரத்தில் பார்வையிடச் செய்வார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !