வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை இயந்திர மயமாக்குதல் பயிற்சி முகாம்.

Madurai Minutes
0

 


 ஆண்டிபட்டி 

 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் ஆராய்ச்சி நிலையம் வைகை அணையில் , தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியகுளம் வட்டம் ஜெயமங்கலம் பகுதியில் உள்ள நெல் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திர மயமாக்குதல் பயிற்சி வழங்கப்பட்டது. இப் பயிற்சியில் ஏராளமான விவசாயிகளும், குபேட்டா இயந்திர வல்லுனர்களும், வேளாண் விஞ்ஞானிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வேளாண் ஆராய்ச்சி நிலைய வைகை அணை பேராசிரியர் மற்றும் தலைவர் மதன்மோகன், பேராசிரியர்கள் பரமேஸ்வரி மற்றும் சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டு விளக்க உரையாற்றினார்கள். இதன்மூலம் கால விரயம் செலவினங்கள் குறைந்து தரமான மகசூல் எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !