மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் இளைஞர்களின் செயல் குறித்த ஐந்து நாள் பயிற்சிப்பட்டறை

Madurai Minutes
0

2023 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி இந்திய அரசின் தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இணைந்து “வெப்ப அலைகளில் இளைஞர்களின் செயல்பாடு: பாதிப்புகளைக் குறைத்தல், திறன்களை மேம்படுதுதல் மற்றும் நெகிழ்ச்சியை உருவாக்குதல்” என்னும் பொருண்மையில் ஐந்து நாள் பயிற்சிப் பட்டறைமதுரை காமராசர் பல்கலைக்கழக பொருளியல் புலத்தில்தொடங்கியது.

புது தில்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் பயிற்றுவிப்பாளர் முனைவர் ஐ. பாலு அவர்கள் நிகழ்வு குறித்த கருத்துருவை விளக்கினார். பயிற்சிப்பட்டறையின் தலைமைப் புரவலரும், மதுரை காமராசர் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தருமான பேராசிரியர் ஜா. குமார் அவர்கள் தலைமை மற்றும் தொடக்கவுரையாற்றி பயிற்சிப்பட்டறையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். இந்த ஐந்து நாள் பயிற்சிப்பட்டறையின் தொடக்க அமர்வில் இந்திய தேசிய மேலாண்மை நிறுவனத்தின் மூத்த திட்ட அலுவலர் முனைவர். குமார் ராக்கா அவர்கள் கலந்துகொண்டு தொடக்கவுரையை நிகழ்த்தினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரும் மற்றும் பொருளியல் புலத்தில் புலத்தலைவருமான பேராசிரியர் முனைவர் சு.நாகரத்தினம் அவர்கள் பயிற்சிப்பட்டறை குறித்து சிறப்புரை மற்றும் வாழ்த்துரை வழங்கினார். பொருளியல் புலத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் வி. சுதாசினி அவர்கள் தொடக்கவிழாவில் நன்றியுரை நல்கினார்.

இந்த ஐந்து நாள் பயிற்சிப்பட்டறையின் தலைமைப்புரவலரும் மதுரை காமராசர் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தருமான பேராசிரியர் ஜா.குமார் அவர்களும் மற்றும் இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சந்தோஷ்குமார் அவர்களும் இப்பயிற்சிப்பட்டறையின் தலைவர்களாவர்.

இப்பயிற்சிப்பட்டறையின் முதல் நாள் முதல் அமர்வில் முனைவர் குமார் ராக்கா அவர்கள் பேரிடர் மேலாண்மை இடர்பாடுகள் குறித்த பொண்மையில் உரை நிகழ்த்தினார்.

இந்த ஐந்து நாள் பயிற்சிப்பட்டறையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைவிப்பு பெற்ற கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், தேசிய மாணவர் படை அலுவலர்கள், இளைஞர் செஞ்சிலுவைசங்க அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் இயற்கை மற்றும் பசுமை அமைப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கு இயற்கை மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்துப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !