பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பு வழங்கிய 23 பேருக்கு டெட்கோ விருது வழங்கப்பட்டது

Madurai Minutes
0

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டெட்கோ) அமைப்பின் முதலாம் ஆண்டு விழா மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பு வழங்கியவர்களுக்கான விருது விழா மதுரை சிக்கந்தர்சாவடி ஏஎப்டிசி வளாகத்தில் நடைபெற்றது. டெட்கோ அவார்ட் 2023 என்ற பெயரில் நடந்த இந்த விழாவுக்கு டெட்கோ தலைவர் ஜே.கே.முத்து தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கி.ராஜமூர்த்தி, பொருளாலர் டி.வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பேராசியரும், நடிகருமான கலைமாமணி கு.ஞானசம்பந்தன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது வேளாண் தொழில் வர்த்தக சங்க தலைவர் எஸ்.இரத்தினவேலுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. சிறந்த உமன் ஸ்டார்ட் அப் ஆப் த இயர் விருது திண்டுக்கல்லைச் சேர்ந்த செளமியா விஜயகுமாருக்கும், சிறந்த டிஜிட்டல் எனேபிளர் விருது ராமநாதபுரம் இப்போ பே நிறுவனத்துக்கும்,  சிறந்த மல்டிஜென் என்டர்பிரைஸ் விருது மதுரை எஸ்விஎஸ் ஃபுட்ஸ் நிறுவனத்துக்கும், சிறந்த கிளஸ்டர் விருது பரமக்குடி இஞ்ஜினியரிங் க்ளஸ்டருக்கும், ஆண்டின் சிறந்த பெண் தொழில்முனைவோர் தஞ்சாவூர், செய்யோன் பயோடெக் அபிராமிக்கும், சிறந்த பெண் சுய உதவிக் குழு விருது மதுரை கருமாத்தூர் பெண்சக்தி சுய உதவிக் குழுவுக்கும் வழங்கப்பட்டது.


 சிறந்த எப்பிஓ விருது சரபங்கா இஎப்ஓ அமைப்புக்கும், ஆண்டின் சிறந்த இயற்கை விவசாயி விருது ஒட்டன்சத்திரம் எஸ்.தமிழ்செல்வனுக்கும், சிறந்த வேளாண் ஸ்டார்ட் அப் விருது  அரியலூர் க்ரோ யுவர் ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் அருணேஸ்வரருக்கும், சிறந்த வீடியோப்ருனர் விருது தேனீர் இடைவேளை ஜெ.பிரகதீஷூக்கும்,  சிறந்த தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் விருது மதுரை சேவ்மாம் நிறுவனத்துக்கும், சிறந்த நிறுவனம் விருது மதுரை சனாஸ்ரீ இன்ஸ்டிட்யூட்டிற்கும்,  சிறந்த இங்குபெட்டர் விருது மதுரை மாபிப் நிறுவனத்துக்கும், ஆண்டின் சிறந்த சமூக ஸ்டார்ட் அப் விருது சிவகங்கை 9 ஜெம்ஸ் அக்ரோ ஃபூயல்ஸ் ராகேஷ்க்கும், சிறந்த ஸ்டார்ட்அப் போரம் விருது மதுரை ஸ்டார்ட்அப் பதியம் நிறுவனத்துக்கும்,  சிறந்த இன்னோவேட்டர் விருது சேலம் முகேஷ் கண்ணாவுக்கும், ஆண்டின் சிறந்த ஏஞ்சல் முதலீட்டாளர் விருது கரூர் மது வாசுதேவனுக்கும் வழங்கப்பட்டது.

மேலும் சிறந்த வழிகாட்டி விருது சென்னை கே.லக்‌ஷ்மணனுக்கும், சிறந்த கடல் உணவுக்கான ஸ்டார்ட் அப் விருது ராமநாதபுரம் லிமூரியன் வென்சரஸ் கலை கதிரவனுக்கும், ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளர் விருது கோவை வாசினி எக்ஸ்போர்ட்ஸ் விஜய்ஆனந்துக்கும், சிறந்த சுகாதார வழங்குநர் விருது மதுரை டாக்டர் மாதவ்ன்ஸ் ஹார்ட் சென்டர், டாக்டர் எஸ். சனத் குமாருக்கும் வழங்கப்பட்டது.

விழா குறித்து டெட்கோ அமைப்பின் தலைவர் ஜே.கே.முத்து கூறுகையில், சிறந்த செயல்பாடுகளுடன் அசெளகரியத்தை அல்லது பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் துவக்கி, நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி, இலக்கை நோக்கி வேகமாக வளரும் தனி நபர்கள், குழுக்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிப்பு வழங்கியவர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று விருது வழங்கி பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிப்பு வழங்கியவர்களை ஊக்குவிக்க இருக்கிறோம். மேலும்  டெட்கோ அமைப்பிற்கு உறுப்பினர் சேர்க்கையும் தொடங்கப்பட்டுள்ளது. அமைப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் 082204 49911 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்றார்.

இந்த விருது வழங்கும் விழாவில் மொத்தம் 23 விருதுகள் வழங்கப்பட்டன. டெட்கோ அமைப்பு, விவிடி ப்யூர் தேங்காய் எண்ணெய், செல்லா சாப்ட்வேர், ஈகிள் மசாலா, ஜெயவிலாஸ், சத்யம் பயோ க்ளீனிக், தபோவன், பாரத் ஸ்நாக்ஸ், துஸ்கார் பேவர்ஸ், ரியல் வயர், டாட் திங்க்ஸ் ஏடிஎம் வழங்குனர், பி-குரோ சர்வீசஸ் டிரேட் மார்க் நிறுவனம், ஏஎன்டி சொல்யூசன்ஸ், ஶ்ரீமதி சாம்பிராணி மற்றும் அகர்பத்திகள், க்ளேஸ்வேர், குளோபள் பள்ளி, முருகாம்பாள் லாலா ஸ்வீட்ஸ், ப்ளூ இஸ்லாண்ட் ஆகிய நிறுவனங்கள் விருதுகளுக்கு ஸ்பான்சர் செய்திருந்தன.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !