கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க அரசு நிதி உதவி - மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் தகவல்.

Madurai Minutes
0

தமிழ்நாட்டில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-2017-ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.

மேற்படி திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.

கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம்,

1. தேவாலயங்களில் பீடம்கட்டுதல் (Construction of Pedestal in Churches)

2. கழிவறை வசதி அமைத்தல் (Construction of Toilet facilities)

3. குடிநீர் வசதிகள் உ ருவாக்குதல் (Creation of Drinking Water facilities)

தேவாலய கட்டடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ள மானிய தொகை விவரம்

1. 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1.00 இலட்சத்திலிருந்து ரூ.2.00  இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

2. 15-20 வருடம் வரை இருப்பின் ரூ.200 இலட்சத்திலிருந்து ரூ.4.00  இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

3. 20 வருடங்களுக்கு மேலிருப்பின் ரூ.3.00 இலட்சத்திலிருந்து ரூ.6.00 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். 

மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !