மதுரை மாநகரில் கால்பதிக்கும் பிக்பேஸ்கட்

Madurai Minutes
0

டாடா குழுமத்தின் ஒரு நிறுவனமான பிக்பேஸ்கட், தமிழ்நாட்டின் பெரிய நகரங்களுள் ஒன்றான மதுரை மாநகரில் அதன் சேவைகளை தொடங்கியிருக்கிறது.  


தினசரி பயன்பாட்டுக்குரிய 30,000-க்கும் அதிகமான பொருட்களை பல வகையினங்களின் கீழ் கொண்டிருப்பது பிக்பேஸ்கட் – ன் தனித்துவ சிறப்பம்சமாகும்.  மொபைல் அல்லது கணினி மூலம் ஆர்டர் செய்வதன் மூலம் இப்பொருட்களின் டெலிவரியை மிக விரைவாகவே வாடிக்கையாளர்கள் பெறமுடியும்.  5000+ புராடக்ட்கள் மீது குறைந்தபட்சம் 6% தள்ளுபடியை இந்த மின் – வர்த்தக தளம் வழங்குகிறது.  இதன் வழியாக, குறைந்த விலையில் தரமான பொருட்களை ஷாப்பிங் செய்யும் அனுபவத்தை பிக் பேஸ்கட் வழங்குகிறது.  இதற்கும் கூடுதலாக, முதல் ஆர்டர் மீது ரூ.200 தள்ளுபடி என்ற சிறப்பு சலுகையையும் வாடிக்கையாளர்கள் பெற்று மகிழலாம்.  


பிக்பேஸ்கட் நிறுவனத்தின் தேசிய அளவிலான தலைமை அலுவலர் – அடுக்கு 2 நகரங்கள், திரு. சஷி சேகர், மதுரையில் பிக்பேஸ்கட்டின் நுழைவு குறித்து கூறியதாவது: “மதுரை வாழ் மக்களுக்கு எமது சேவைகளை வழங்குவது எங்களுக்கு பெரும் உற்சாகத்தையும், பெருமிதத்தையும் தருகிறது.  இம்மாநகர மக்களின் அனைத்து வகையான பலசரக்கு பொருட்கள் தேவையை பிக்பேஸ்கட் சிறப்பாக பூர்த்திசெய்யும்.  உரிய நேரத்திற்குள் டெலிவரி, எந்த கேள்விகளும் இல்லாமல் பொருட்களை திரும்பபெறும் கொள்கை, மிகக்குறைந்த விலைகள், தயாரிப்புகளின் விரிவான அணிவரிசை ஆகிய எமது சிறப்பம்சங்கள் உள்ளூர் மக்களால் சிறப்பான வரவேற்பை பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.  நாங்கள் சேவைகளை வழங்கி வரும் அனைத்து நகரங்களிலும் வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் விகிதங்கள் மற்றும் வாங்கும் பொருட்களின் அளவுகள் ஆகியவற்றை தொடர்ந்து நிலையாக நாங்கள் பேணி வருகிறோம்.  மதுரை மாநகரிலும் இதே சாதனையை நாங்கள் நிச்சயமாக நிகழ்த்துவோம் என்பதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை.” 


பிக்பேஸ்கட், தற்போது இந்தியாவில் 400-க்கும் அதிகமான நகரங்களில் சேவைகளை வழங்கி வருகிறது; ஒவ்வொரு நகரிலும் குறைந்த விலைகளில் ஒவ்வொரு நாளும் உயர்தரமான பொருட்களை தொடர்ந்து நிலையாக வழங்குவதன் வழியாக ஆன்லைன் பலசரக்குப் பொருட்கள் சந்தையில் இதுவரை எட்டாத மைல்கற்களை இது உருவாக்கி வருகிறது.  நம்நாட்டில் ஆன்லைனில் பலசரக்குப் பொருட்களை வாங்குபவர்கள் மத்தியில் 4.7 என்ற தர மதிப்பெண்ணை பிக்பேஸ்கட் செயலி பெற்றிருக்கிறது.  ஒரு மாதத்திற்கு 15 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர் ஆர்டர்களைப் பெற்று சேவை வழங்கி வரும் பிக்பேஸ்கட் நிறுவனத்தின் தற்போதைய வருவாய் 1.2 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இருக்கிறது.  

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !