ஒத்தக்கடை திருமோகூர் கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,83,000/-க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

Madurai Minutes
0

மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், ஒத்தக்கடை திருமோகூர் கிராமம் திருவிழாவின் போது நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் மதுரை அரசு இராசாசி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் சந்தித்து தீருதவித் தொகை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.


மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பொருட்களுக்கு பொதுப்பணித்துறை, மதுரை மண்டல போக்குவரத்து அலுவலர் அவர்களிடமிருந்து சேதமதிப்பீட்டு அறிக்கை மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்மொழிவு வரப்பெற்றதைத் தொடர்ந்து  8 வீடுகள் சேதம் அடைந்ததற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.14,800/-மும், 34 இரண்டு சங்கரங்கள் மற்றும் 1 நான்கு சக்கரங்கள் (மொத்தம் 35 வாகனங்கள்) சேதம் அடைந்ததற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.3,18,200/–மும், பாதிக்கப்பட்ட 4 நபர்களுக்கு தீருதவித் தொகையாக ரூ.2,50,000/–மும் என மொத்தம் 47 நபர்களுக்கு ரூ.5,83,000/-க்கான காசோலையினை ஒத்தக்கடை கிழக்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.


இந்த நிகழ்வின் போது,  மேலூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.பிரிதோஷ் பாத்திமா அவர்கள், ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.கோட்டூர் சாமி அவர்கள், கிழக்கு வருவாய் வட்டாட்சியர் அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !