டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மதுரை கிளையில் கண்புரைக்கான நவீன அறுவை சிகிச்சை இயந்திரம் அறிமுகம்

Madurai Minutes
0

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம், அதன் மதுரை மையமான ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனையில் Z-கேட்டராக்ட் (கண்புரை) ஃபெம்டோசெகண்டு லேசர் அசிஸ்டட் கேட்டராக்ட் சர்ஜரி (FLACS) இயந்திரத்தை சமீபத்தில் நிறுவி செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறது. டாக்டர் அகர்வால்ஸ் குழுமத்தின் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை, (முதன்மை மருத்துவமனை, மதுரை) மதுரை தலைமையதிகாரி மற்றும் பிராந்திய தலைவர்  டாக்டர். எஸ். ஸ்ரீனிவாசன் அவர்களது தலைமையின் கீழ் திறம்பட இயங்கி வருகிறது.  டாக்டர். அகர்வால்ஸ் குழுமத்தின் ஒட்டுமொத்த கண் மருத்துவமனைகளுள் இந்த நவீன இயந்திரம் நிறுவப்பட்டிருக்கும் வெகுசில மருத்துவமனைகளுள் மதுரை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.  


டாக்டர் அகர்வால்ஸ் குழுமத்தின் மருத்துவ சேவைகளின் மதுரை தலைமையதிகாரி மற்றும் பிராந்திய தலைவர் – டாக்டர். எஸ். ஸ்ரீனிவாசன் பேசுகையில், “லேசர் அடிப்படையிலான இந்த நவீன தொழில்நுட்ப திறன் கொண்ட இயந்திரம், வயது முதிர்ந்த நபர்களுக்கு மிகவும் பொருத்தமானதாகும்.  கண்புரை நோய் என்பது, குழந்தைகள் மற்றும் இளவயது நபர்களை விட முதியவர்களிடம் தான் மிக அதிகமாக கண்டறியப்படுகிறது.  இருப்பினும், இந்த நவீன இயந்திரத்தின் தொழில்நுட்பமானது, குழந்தைகளுக்கும் , இளவயது நபர்களுக்கும் மிக்சிறப்பாக செயலாற்றக்கூடியது.  எந்த வயதில் அவர்கள் இருப்பினும், கண்புரை பாதிப்புள்ள குழந்தைகளுக்கு இந்த மேம்பட்ட நவீன லேசர் உத்தியின் மூலம் இதற்கான அறுவைசிகிச்சையை சிறப்பாக செய்ய முடியும்.” 


“இந்தியாவில்  பொதுவாக மேற்கொள்ளப்படுகின்ற வழக்கமான மேனுவல் லேசர் அறுவைசிகிச்சையோடு ஒப்பிடுகையில், இங்கு நிறுவப்பட்டிருக்கும் லேசர் அறுவைசிகிச்சைக்கான இயந்திரமே மிகவும் மேம்பட்ட நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும்.  இதன்மூலம் செய்யப்படுகின்ற அறுவைசிகிச்சையில், அறுவைசிகிச்சைக்கான கத்திக்குப் பதிலாக, லேசரைப் பயன்படுத்தி கண்ணில் வெட்டு / கீறல் செய்யப்படுகிறது. வழக்கமான  கண்வில்லை அறுவைசிகிச்சையில் ஊசியைக்கொண்டு செய்யப்படுகின்ற உறைவடிவான பையைத் திறக்கும் செயல்பாடு, இந்த நவீன அறுவைசிகிச்சையில் லேசரைக் கொண்டு செய்யப்படுகிறது. அறுவைசிகிச்சைக்கான 80 முதல் 90% வரையிலான செயல்பாடு, இதில் லேசர் சாதனத்தைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது.  கண்புரையை உடைத்து துகளாக்குவது, ஃபெம்டோசெகண்டு லேசரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது; வழக்கமான கண்வில்லை அறுவைசிகிச்சையுடன் ஒப்பிடுகையில், இதில் பயன்படுத்தப்படும் அல்ட்ராசவுண்டு ஆற்றலின் அளவு குறைவானதாகும். அதனால் கருவிழிப் படலத்திற்கு அதிக பாதுகாப்பு கிடைக்கிறது.” என்று சென்னை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் டாக்டர். ரம்யா சம்பத் விளக்கமளித்தார். 


“அணுக்கருவைப் பகுப்பதற்கு மிக மிக குறைவான ஆற்றலே பயன்படுத்தப்படுவது, FLACS தொழில்நுட்ப சாதனத்தின் சிறப்பான ஆதாயங்களுள் ஒன்றாகும்.  இவ்வாறாக, ஆற்றல் மாற்றுகை செயல்பாட்டின்போது, கருவிழிப்படலம் முற்றிலுமாக பாதுகாக்கப்படுகிறது.  இது வெட்டுக்காயத்தை மிக கச்சிதமாகவும், சுத்தமாகவும்  மேற்கொள்ள வகை செய்கிறது; அதனை மூடுவதையும் மற்றும் படிதல் மூலம் வலுவூட்டவும் இது உதவுகிறது.” என்று டாக்டர். எஸ். ஸ்ரீனிவாசன் மேலும் விளக்கமளித்தார். 


அறுவைசிகிச்சைக்கான நேரம் கணிசமாக குறைக்கப்படுவதற்காக, அதிகபட்சமாக இயந்திர செயல்பாடு மற்றும் குறைவாக மனித செயல்பாடு என்ற கருத்தாக்கத்தை இந்த லேசர் அறுவைசிகிச்சை பின்பற்றுகிறது.  லேசர் உதவியுடன் கண்புரைக்கான அறுவைசிகிச்சை இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகள் பெறக்கூடிய கூடுதல் பலன்களுள் இதுவும் ஒன்றாகும்.  


“இந்த அறுவைசிகிச்சை எந்த அளவிற்கு மேம்பட்டது என்றால், அறுவைசிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்படுவதற்கு 24 மணி நேரங்கள் வரை நோயாளி காத்திருக்க வேண்டியதில்லை.  அறுவைசிகிச்சைக்குப் பிறகு கண்காணிப்பின் கீழ், அதிகபட்சமாக 3 மணி நேரங்கள் வைக்கப்படுவதற்குப் பிறகு நோயாளியை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கலாம்.  அதற்கு அடுத்த நாளிலிருந்தே அறுவைசிகிச்சை செய்யப்பட்ட நபர், அவரது வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் செய்யத் தொடங்கலாம். ஃபெம்டோ லேசர் அசிஸ்டட் கேட்டராக்ட் சர்ஜரி (FLACS) – ல், அடர்த்தியான கண்புரை நிலை மற்றும் மிகவும் பலவீனமாக கருவிழிப் படலமுள்ள நோயாளிகளிடமும் கூட பார்வைத்திறன் மீட்சி நேரம் மிக வேகமாக சாத்தியமாகிறது.” என்று டாக்டர். ரம்யா சம்பத் இதன் சிறப்பான ஆதாயத்தை சுட்டிக்காட்டினார். 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !