உணவு பாதுகாப்பு தரவரிசை பட்டியலில் மதுரை மாவட்டம் இந்திய அளவில் 8வது இடத்திலும் தமிழக அளவில் 3வது இடத்தையும் பெற்றுள்ளது

Madurai Minutes
0

உணவு பாதுகாப்பு தொடர்பான 5வது தர வரிசை பட்டியலை மத்திய அரசு 07.06.20023 அன்று வெளியிட்டது. இதில் தமிழகம் இந்த ஆண்டு 3ஆம் இடத்தை பிடித்து கடந்த நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து முதல் 3 இடங்களை பிடித்துள்ளது. பட்டியலில் கோவை பாவட்டம் முதவிடத்தில் உள்ளது. சிறந்த மாவட்டங்களுக்கான சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி புது டெல்லியில் 07.06.2023 அன்று நடந்த நிகழ்ச்சியில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர வெளியிடப்பட்டது. ஆணையம் சார்பில் 5-வது ஆண்டாக தர வரிசை பட்டியல் இதில் 5 அம்சங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மதிப்பெண் வழங்கப்பட்டு இந்த தர வரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.


மாவட்டங்களுக்கான தர பட்டியலில் 231 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 31 மாவட்டங்கள் 75 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 2-ஆம் இடத்தில் திண்டுக்கல், 3-ஆம் இடத்தில் மதுரை, தொடர்ந்து பெரம்பலூர், சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருவள்ளூர், திருப்பூர், சிவகங்கை, நாமக்கல், திருச்சி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்கள் 75 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளன. 


கடந்த ஆண்டு 2021-2122 இந்திய அளவில் மதுரை மாவட்டம் 42-வது இடத்திலும் தமிழக அளவில் 8னது இடத்திலும் இடம் பெற்றது. இந்த ஆண்டு 2022-2023 இந்திய அளவில் மதுரை மாவட்டம் 8-வது இடத்திலும் தமிழக அளவில் 3-வது இடத்திலும் இடம் பெற்றது. மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் வே.ஜெயராம பாண்டியன் தலைமையில் அனைத்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுடன் விருதினை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா. இ.ஆ.ப., அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெறப்பட்டது.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !