மதுரை கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக் கழகம் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

Madurai Minutes
0

தமிழ்நாட்டில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு உபயோகத்தினை அதிகரிக்கும் நோக்கத்தில் தேசிய சேமிப்பு கிடங்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிதிஉதவியுடன் ஐந்து நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மதுரையில் கூட்டுறவு மேளாண்மை பயிற்சிக் கழகம் சார்பில்  12.06.2023 முதல் 16.06.2023 வரை நடைபெற்று வருகின்றது.  தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுகின்ற ஒழுங்கு முறை விற்பனை கூடங்களின் கண்காணிப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் இந்த பயிற்சியில் பங்கு பெறுகின்றனர்.


பயிற்சியின் நோக்கங்கள் :


  • தானியங்களின் தர ஆய்வு மற்றும் சேமிப்பு முறைகள் பற்றி பயிற்சியளித்தல்

  • சேமிப்பில் வரும் இழப்புகளை தவிர்த்தல் குறித்து தெரிந்து கொள்ளுதல்

  • கிடங்குகளில் பூச்சி, எலி மற்றும் பறவைகளினால் வர கூடிய தானிய இழப்புகளை தவிர்த்தல் கூறித்து தெரிந்து கொள்ளுதல்.

  • தானியங்களை சிறப்புற கையாளும் முறைகளை ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்வதன்  முலம் கிடைக்கும் பலன்கள் குறித்து பயி;ற்சி அளித்தல்.

  • நடப்பில் உள்ள மின்னனு மாற்ற தகுந்த கிடங்கு இரசிதின் சிறப்பு அம்சங்கள் அதன் முலம் விவசாயிகள் பெறும் பலன்கள் தெளிவுற கற்றுக்கொடுக்கப்படுகிறது.


களப்பயிற்சி:


பயிற்சியின் ஒரு பாகமாக 14.06.2023 மாலை 2.30 மணி முதல் 5 மணி வரை மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம் மதுரையில் களப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முக்கியமான பொருட்களின் மதிப்பீட்டின் நடைமுறை விளக்கக்காட்சி மாதிரி பகுப்பாய்வு மற்றும் தரப்படுத்துதல், சரக்கு இறுப்புத்திட்டம், சரக்குகளை அடுக்கும் முறைகள், குவியலுடுதல், பூச்சி மருந்து தெளித்தல் மற்றும் புகை மூட்டம் இடுதல் குறித்து நேரடி பயிற்சி அளிக்கப்படுகிறது.


இந்த பயிற்சியினை மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழக இயக்குனர் முனைவர் தர்மராஜ் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். விரிவுரையாளர் முனைவர் அழுகுபாண்டியன் பயிற்சிக்கான எற்பாடுகளை செய்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !