மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய மூன்று நாள் தேசிய அளவிலான கருத்தரங்கு

Madurai Minutes
0

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், அதன் மருத்துவமனை வளாகத்தில்  “The Resuscitation India Summit 2023 and Beyond” என்ற பெயரில், ஒரு புதுமையான, தேசிய அளவிலான கருத்தரங்கை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.  


தி இந்தியன் காலேஜ் ஆஃப் எமர்ஜென்சி மெடிசின் (TICEM) என்பதன் ஒத்துழைப்போடு நடத்தப்பட்ட இக்கருத்தரங்கு நிகழ்வில் இந்தியாவெங்கிலுமிருந்து பல்வேறு மருத்துவ கல்லூரிகள், தனியார்துறை மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளை சேர்ந்த 300-க்கும் அதிகமான மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.  சமீபத்திய மருத்துவ தொழில்நுட்பங்களின் மூலம்  உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளை காப்பாற்றுவது பற்றி சுகாதார பணியாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குவதும் மேம்படுத்துவதுமே இக்கருத்தரங்கின் முதன்மை குறிக்கோளாகும்.  அவசரநிலை சிகிச்சை நடைமுறைகளிலும், நோயாளிகளுக்கு கிடைக்கும் சிகிச்சைகளிலும் முன்னேற்றங்களை எட்ட ஊக்குவிப்பது இக்கருத்தரங்கின் நோக்கமாக இருந்தது.


“The Resuscitation India Summit 2023 and Beyond” என்ற இக்கருத்தரங்கு, மதுரை மருத்துவக் கல்லூரியின் டீன் பேராசிரியர் டாக்டர். A. ரத்தினவேல் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி   டாக்டர். B. கண்ணன், சிறுநீரகவியல் துறையின் தலைவர் டாக்டர். சம்பத் குமார் மற்றும் அவசர சிகிச்சை துறை தலைவரும் மற்றும் இக்கருத்தரங்கின் அமைப்புக்குழு தலைவருமான டாக்டர். நரேந்திர நாத் ஜனா ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர். 


இதயச் செயலிழப்பு, பக்கவாதம் / ஸ்ட்ரோக் வராமல் தடுப்பது, காயங்களுக்கு மேம்பட்ட மேலாண்மை மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகளில் அறிவியல் ரீதியிலான சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் நிகழ்நிலை தகவல்கள் ஆகியவை மீது பல்வேறு அமர்வுகள் இக்கருத்தரங்கு நிகழ்வில் இடம்பெற்றிருந்தன.  யோகா மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளை காப்பாற்றுவதன் போது ஏற்படும்  மனஅழுத்த மேலாண்மை ஆகியவை மீதும் நடைபெற்ற அமர்வுகள், நோயாளிகளுக்கு சிறப்பாக நெறிப்படுத்தப்பட்ட பராமரிப்பையும், பயனளிக்கும் சிகிச்சையையும் வழங்குவது குறித்த திறனை பங்கேற்பாளர்களுக்கு வழங்கியது. 

இக்கருத்தரங்கு நிகழ்வின்போது மீனாட்சி மிஷன் மருத்துவமனையின்  மருத்துவ குழுவினரால் இதய செயலிழப்பு பாதிப்பிலிருந்து வெற்றிகரமாக காப்பாற்றப்பட்ட நோயாளிகள், “"Learn First Aid & Save Lives" என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தை வெளியிட்டனர்.  இப்புத்தகத்தில், உயிர்காப்பதற்கான 108 நெறிமுறைகள் இடம்பெற்றிருக்கின்றன. 


மதுரை  மீனாட்சி மிஷன் மருத்துவமனை & ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் டாக்டர். N. சேதுராமன் அவர்களை கௌரவிக்கும் விதத்தில் “டாக்டர். N. சேதுராமன் விருது” என்ற விருது இக்கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட மிகச்சிறந்த ஆராய்ச்சி கட்டுரைக்கு வழங்கப்பட்டது.  இந்தியா முழுவதிலும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை வழங்குவதை உறுதிசெய்வதும், உயிர் காப்பதை மேம்படுத்துவதும்  இக்கருத்தரங்கு நிகழ்வின் நோக்கமாகும்.  

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !