மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தின அனுசரிப்பு

Madurai Minutes
0

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில், நேற்று  (05.06.2023) கோட்ட ரயில்வே மேலாளர் திரு. பி.அனந்த் , உறுதிமொழியை ஏற்றார்.

கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர், திரு. டி.ரமேஷ் பாபு, கோட்டப் பணியாளர் அலுவலர் திரு.டி.சங்கரன் மற்றும் கோட்ட சுற்றுச்சூழல் பராமரிப்பு மேலாளர் மகேஷ் கடகரி, இதர அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

மதுரை சந்திப்பில், விழிப்புணர்வு பேரணி, சிரமதானம், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்று ஆகியவை அடங்கிய கண்காட்சி மற்றும் விளக்க நாடகம் ஆகியவை நடத்தப்பட்டன. சாரண சாரணியர் மற்றும் RPF பணியாளர்களின் பங்கேற்புடன் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. கோட்ட இயந்திரவியல் பொறியாளர் திரு.பி.சதீஷ் சரவணன் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.


ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது. கரும்பு சக்கை , சோள மாவு மற்றும் மக்கும் இயல்புடைய சுற்றுச்சூழலுக்கு உகந்த PLA (பாலி லாக்டிக் அமிலம்) பூசப்பட்ட பொருட்களால் செய்யப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. சாதாரண பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்கு மாற்றாக பருத்தி, தென்னை நார், சணல் பைகள் காட்சிப்படுத்தப்பட்டன.


லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரியின் என்சிசி தன்னார்வலர்கள் ஸ்டேஷன் பகுதியைச் சுத்தம் செய்தனர். சௌராஷ்டிரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் இன்றைய வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து ஒரு வீதி நாடகத்தை நடத்தினர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !